Home
Gadgets

Xiaomi வெயிட்டு தான்.. யாரும் எதிர்பார்க்காத 800 ரூபாய் டிவைஸ்.. ஏறி நின்றால் கூட உடையாது.. வீட்டுக்கு 1 தேவை.

சியோமி (Xiaomi) நிறுவனம் அதன் கேட்ஜெட் வரிசையில், புதிதாக சியோமி மிஜியா வெயிங் ஸ்கேல் எஸ்200 ப்ளூ எடிஷன் (Xiaomi MIJIA Weighing Scale S200 Blue Edition) என்ற புதிய எடை மெஷின் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. கடந்த மாதம் தான் சியோமி நிறுவனம் சியோமி மிஜியா வெயிங் ஸ்கேல் எஸ்200 மாடலை சீனாவில் அறிமுகம் செய்தது. இப்போது இதில் ப்ளூ நிற வேரியண்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.

வெயிங் ஸ்கேல் என்பது எடை பார்க்கும் கருவிக்கான ஆங்கில பெயராகும். உடல் ஆரோக்கியம் பற்றி அக்கறை கொண்ட நபர்களின் வீட்டிலும் கட்டாயம் இந்த வெய்யிங் ஸ்கேல் இருக்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகள் மற்றும் பெரியர்வர்கள் இருக்கும் வீடுகளில் இது அதிக தேவைப்படும். வீட்டில் இருக்கும் உங்கள் பிரியமானவர்களின் எடையை அவ்வப்போது கண்காணித்து அதற்கு ஏற்றார் போல அவர்களின் உணவு பழக்கம் மற்றும் ஆரோக்கியத்தை டியூன் செய்து வந்தால், அவர்கள் சிறப்பாக இருப்பார்கள்.

Xiaomi வெயிட்டு தான்.. யாரும் எதிர்பார்க்காத 800 ரூபாய் டிவைஸ்..

சியோமி மிஜியா வெயிங் ஸ்கேல் எஸ்200 ப்ளூ எடிஷன் (Xiaomi MIJIA Weighing Scale S200 Blue Edition):

இந்த காரணத்தினால் தான், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வெய்யிங் ஸ்கேல் மெஷின் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. சியோமி அறிமுகம் செய்துள்ள இந்த புதிய சியோமி மிஜியா வெயிங் ஸ்கேல் எஸ்200 ப்ளூ எடிஷன் (Xiaomi MIJIA Weighing Scale S200 Blue Edition) சாதனமும் கூட இப்போது சீன சந்தையில் முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சியோமி தயாரிப்புகள் (Xiaomi products) என்றாலே, அதில் கண்டிப்பாக எதாவது ஒரு தனி சிறப்பு கட்டாயம் இருக்க கூடும்.

அப்படி பார்க்கையில், இந்த சியோமி மிஜியா வெயிங் ஸ்கேல் எஸ்200 ப்ளூ எடிஷன் சாதனத்தில் என்ன தனிச்சிறப்பு இருக்கிறது என்று இப்போது தெரிந்துகொள்ளலாமா? இந்த புதிய சியோமி மிஜியா வெயிங் ஸ்கேல் எஸ்200 ப்ளூ எடிஷன் சாதனம் ஒரே நேரத்தில் நான்கு உடல் அளவுருக்களை அளவிடும் திறன் கொண்டது என்று சியோமி தெரிவித்துள்ளது.

இதன் E-வடிவ மற்றும் உயர் துல்லியமான மாங்கனீசு ஸ்டீல் சென்சார் (manganese steel sensor) காரணமாக இது உயர் துல்லிய அளவீடுகளை வழங்குகிறது. இந்த சென்சார் குறைந்தபட்சமாக 0.05 கிலோ கணக்கை அளவிடுகிறது. அதாவது இது 0.1 கிலோ முதல் 150 கிலோ வரை எடையுள்ள வரம்பைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக மிகவும் துல்லியமான அளவுகளை திறமையான முறையில் இது கணக்கிடுகிறது.

ஏறி நின்றால் கூட உடையாது.. வீட்டுக்கு 1 தேவை:

இது ஒரு நபரின் எடை மற்றும் BMI அளவுகளை நிகழ்நேரத்தில் கணக்கிடுகிறது. அதேபோல், இந்த சியோமி எடை மெஷின் (Xiaomi weighing machine) பயனரின் வயது, உயரம் அடிப்படையில் அவர்களின் எடை சரியாக இருக்கிறதா இல்லையா என்பதை தெரியப்படுத்துகிறது. இது ஒரே நேரத்தில் 36 தனி நபர் எடை தகவல்களை சேமித்து வைக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மீது ஏறி நின்றால் கூட உடையாத வகையில் மிகவும் உறுதியாக உருவாக்கப்பட்டுள்ளது.

உண்மையில், இதுவொரு ஸ்மார்ட் வெய்யிங் ஸ்கேல் போல் செயல்படுகிறது. இதில் ப்ளூடூத் அம்சம் என்று இன்னும் ஏராளமான அம்சங்களை சியோமி நிறுவனம் பேக் செய்துள்ளது. இந்த புதிய சியோமி மிஜியா வெயிங் ஸ்கேல் எஸ்200 ப்ளூ எடிஷன் (Xiaomi MIJIA Weighing Scale S200 Blue Edition) விலை பற்றி பேசுகையில், இது இந்திய மதிப்பில் வெறும் ரூ. 835 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mijia Weighing Scale S200 Blue Edition Launched In China Check Indian Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X