Xiaomi இன்வெர்டர் ஃபேன்.. 100 ஃபேன் விண்ட் ஸ்பீட்.. மொபைல் மற்றும் குரல் மூலம் ரிமோட் கண்ட்ரோல்.. விலை என்ன?
சியோமி (Xiaomi) நிறுவனம் அதன் கேட்ஜெட்ஸ் (Gadgets) சாதனம் வரிசையில் புதிதாக ஒரு பெடஸ்டல் ஃபேன் (Pedastal Fan) சாதனத்தை சேர்த்துள்ளது. ஸ்டேண்டிங் ஃபேன் (Standing Fan) என்று எளிமையாக அழைக்கப்படும் வழக்கமான சாதாரண ஃபேன் (Fan) போல இதை நினைத்துவிடாதீர்கள். சியோமி தயாரிப்பு என்றாலே அதில் எக்கச்சக்க புதுமைகள் மற்றும் ஆச்சரியப்படும் அம்சங்களை நிறுவனம் ஒவ்வொரு முறையும் வழங்கி, அதன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அப்படி இந்த ஃபேனை நீங்கள் ஸ்மார்ட்போன் (Smartphone) மற்றும் மொபைல் (Mobile) ஆப்ஸ் மூலம் கட்டுப்படுத்தும் ரிமோட் (Remote) அம்சத்தை வழங்குகிறது.
சியோமி நிறுவனம் அதன் தயாரிப்புகள் மூலம் மக்களின் தேவையை பூரித்தி செய்யும் ஒரு தலைசிறந்த நிறுவனமாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், உலகம் முழுக்க தனக்கென்று ஒரு தனி இடத்தை இந்நிறுவனம் பிடித்துள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. சியோமி நிறுவனம் இப்போது புதிதாக அறிமுகம் செய்துள்ள, சாதனம் தான் சியோமி மிஜியா ஸ்மார்ட் டிசி இன்வெர்டர் ஃப்ளோர் ஃபேன் 1எக்ஸ் (Xiaomi MIJIA Smart DC Inverter Floor Fan 1X).

சியோமி மிஜியா ஸ்மார்ட் டிசி இன்வெர்டர் ஃப்ளோர் ஃபேன் 1எக்ஸ் (Xiaomi MIJIA Smart DC Inverter Floor Fan 1X):
இந்த புதிய சியோமி மிஜியா ஸ்மார்ட் டிசி இன்வெர்டர் ஃப்ளோர் ஃபேன் 1எக்ஸ் (Xiaomi MIJIA Smart DC Inverter Floor Fan 1X) சாதனம் சியோமியின் முன்னோடி பேன்களை போலவே மினிமலிஸ்ட் டிஸைனுடன் அதேபோல் காட்சியளிக்கிறது. ஆனால், இது சற்று பெரிய தோற்றத்துடன் விங் ஷேப் ஃபேன் பிளேடுகளை (Wing shape fan blades) இது கொண்டுள்ளது. இதன் மூலம் ஹை-குவாலிட்டி ஏர்ஃபிளோ உங்கள் அறையை நிரப்புவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
உங்கள் வீட்டில் ஏசி என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஏர் கண்டிஷனர் இருக்கிறதென்றால், நீங்கள் தாராளமாக இந்த சியோமி மிஜியா ஸ்மார்ட் டிசி இன்வெர்டர் ஃப்ளோர் ஃபேன் 1எக்ஸ் சாதனத்தை வாங்கி பயன்படுத்தலாம். இது ஏசி காற்றை அறைமுழுக்க விரிவுபடுத்த உதவும் என்றும், இதன் மூலம் நீங்கள் முழு நேரம் ஏசியை தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய தேவையில்லை என்று சியோமி கூறுகிறது.
அதேபோல், இதுவொரு இன்வெர்டர் மாடல் ஃபேன் (Inverter Fan) என்பதனால், இதன் மின்சார பயன்பாடும் குறைவாகவே இருக்கிறது என்று சியோமி நிறுவனம் கூறியுள்ளது. இந்த சியோமி ஸ்மார்ட் ஃபேன் (Xiaomi Smart Fan) சாதனத்தை பயன்படுத்தி நீங்கள் மின்சார கட்டணத்தை (current bill) குறைக்கலாம் என்றும் சியோமி தெரிவித்துள்ளது. இது மூன்று வகையான ஏர்ஃபிளோ பயன்பாட்டை (3 types of airflow) வழங்குகிறது.
100 விண்ட் ஸ்பீட் வேகத்துடன்.. இந்த சியோமி மிஜியா ஃபேன் விலை என்ன? (Xiaomi Mijia Fan with 100 Wind Speed Price):
இதில் டிசி மோட்டார் (DC motor) இடம்பெறுவதினால், இதில் அதிக இரைச்சல் மற்றும் சத்தம் இருப்பதில்லை. இந்த சியோமி ஃபேன் (Xiaomi Fan) 1.6W பவர் ரேட்டிங்கை கொண்டுள்ளது. அதாவது இது மிகவும் குறைந்த அளவு மின்சாரத்தையே எடுத்துக்கொள்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இதை நீங்கள் Mi Home App மூலமாக உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது மொபைல் மூலம் கட்டுப்படுத்தலாம்.
குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் இயங்கும் படி, டைமர் செட் செய்யவும் இது அனுமதிக்கிறது. இது Xiao Ai voice control ஆதரவையும் கொண்டுள்ளது. இதன் மூலம் உங்கள் குரல் கட்டுப்பாட்டில், பேன்னின் ஸ்பீட், ஆன் மற்றும் ஆஃப் போன்ற விஷயங்கள் நீங்கள் குரல் கட்டளை மூலம் செய்யலாம். இது 100 விண்ட் ஸ்பீட் (wind speed) வேகத்துடன் வருகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் வெறும் ரூ. 2800 மட்டுமே.


Click it and Unblock the Notifications








