Home
Gadgets

Xiaomi ரைஸ் குக்கர்.. வீட்டுக்கு ஒன்னு வாங்கி போடுங்க.. 12 மணி நேரத்திற்கு சுடசுட சாதம்.. விலையோ ரொம்ப கம்மி..

சியோமி (Xiaomi) நிறுவனம் புதிதாக ஒரு ரைஸ் குக்கர் சாதனத்தை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ரைஸ் குக்கர் சாதனத்தை நிறுவனம் சியோமி மிஜியா நியூ ரைஸ் குக்கர் N1 3L (Xiaomi Mijia's New Rice Cooker N1 3L) என்ற பெயருடன் அறிமுகம் செய்துள்ளது. சந்தையில் விற்பனை செய்யப்படும் வழக்கமான ரைஸ் குக்கர் போல இல்லாமல், இந்த சியோமி ரைஸ் குக்கர் (Xiaomi Rice Cooker) பல ஸ்மார்ட் அம்சங்களுடன் வருகிறது. இந்த புதிய ரைஸ் குக்கர் பற்றிய விபரங்கள் இதோ.

சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய சியோமி மிஜியா நியூ ரைஸ் குக்கர் N1 3L (Xiaomi Mijia's New Rice Cooker N1 3L) சாதனம் ஸ்மார்ட் அம்சங்கள் அடங்கிய ஒரு சூப்பர் ரைஸ் குக்கர் சாதனமாக வருகிறது. சியோமி நிறுவனம் இதில் பல அற்புதமான அம்சங்களை சேர்த்துள்ளது. இந்த மிஜியா நியூ ரைஸ் குக்கர் N1 3L சாதனம் 9 குக்கிங் முறையை ஆதரிக்கிறது.

Xiaomi ரைஸ் குக்கர்.. வீட்டுக்கு ஒன்னு வாங்கி போடுங்க.. சுடசுட சாதம்..

சியோமி மிஜியா நியூ ரைஸ் குக்கர் N1 3L (Xiaomi Mijia's New Rice Cooker N1 3L):

அதாவது, நீங்கள் சமைக்க நினைக்கும் அரிசியின் வகை எதுவாக இருந்தாலும், அதற்கு ஏற்றபடியான 9 விதமான, தனித்துவமான சமையல் முறையை கொண்டு சாதத்தை வடிக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல், இந்த மிஜியா ரைஸ் குக்கர் (Mijia Rice Cooker) மூலம் உருவாக்கப்படும் சாதம் 12 மணி நேரம் வரை சுடசுட தயார்நிலையில் இருக்குமாம். இதனால் பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் சுடசுட சாதத்தை சாப்பிட முடியும்.

இந்த ரைஸ் குக்கரின் பிரத்தியேகமான 9 விதமான குக்கிங் மோட், அரிசிக்கு ஏற்ற வகையில் ஆட்டோமேட்டிக் ஆக சமையல் முறையை தேர்வு செய்கிறது. சாதத்தின் மனம் மற்றும் சுவையை அதிகரிக்க உதவும் சமையல் முறையை இந்த ரைஸ் குக்கர் உறுதி செய்கிறது. அதேபோல், சரியான ஈரப்பதத்துடன் அரிசியை சாதமாக்குகிறது. இதனால் சாதனத்தின் ருசி அதிகரிப்பதாக சியோமி தெரிவித்துள்ளது.

அதேபோல், விரைவாக சமைக்க நினைக்கும் பயனர்களுக்காக இதில் குவிக் குக்கிங் அம்சமும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் வெறும் 28 நிமிடங்களில் சாதத்தை சமைக்க முடிகிறது. இந்த சியோமி மிஜியா நியூ ரைஸ் குக்கர் N1 3L (Xiaomi Mijia's New Rice Cooker N1 3L) சாதனம் ஒவ்வொரு பருக்கை சாதமும் தனித்தனியே ஒட்டாமல் இருப்பதாய் உறுதி செய்கிறது.

12 மணி நேரத்திற்கு சுடசுட சாதம்.. சியோமி மிஜியா நியூ ரைஸ் குக்கர் N1 3L விலை (Xiaomi Mijia's New Rice Cooker N1 3L Price):

இந்த சியோமி மிஜியா நியூ ரைஸ் குக்கர் N1 3L (Xiaomi Mijia's New Rice Cooker N1 3L) சாதனத்தின் விலை பற்றி பேசுகையில், இதை சியோமி நிறுவனம் தற்போது சீன சந்தையில், 159 யுவான் என்ற மிகவும் குறைந்த விலையில் அறிமுகம் செய்து ஆன்லைனில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக வெறும் ரூ.1,800 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. JD.com வழியாக வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Mijia New Rice Cooker N1 3L Keeps Cooked Rice Warm For Up To 12 Hours Check Price and Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X