Home
Gadgets

Xiaomi தலையணை.. இனி உறக்கத்திற்கு டிஸ்டர்ப் இல்லை.. 1 இல்லை 2 தலையணை.. யாரும் எதிர்பார்க்காத விலை?

சியோமி (Xiaomi) நிறுவனம் உலக சந்தைக்குள் யாரும் எதிர்பார்த்திடாத இரண்டு தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது. அது தான் சியோமி நிறுவனத்தின் புதிய தலையணை (Pillow). என்னது தலையணையா?உண்மையாகவா? ஆம், சியோமி நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் 2 தலையணையை அறிமுகம் செய்துள்ளது.

சியோமி நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களில் அதன் விற்பனையை துவங்கி, படிப்படியாக ஒவ்வொரு கேட்டகிரியிலும் பல புதிய சாதனங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. ஸ்மார்ட்போன் (smartphone), ஸ்மார்ட் டிவி (smart TV), ஸ்மார்ட்வாட்ச் (smarteatch), ஸ்மார்ட் எலக்ட்ரானிக் பைக் (electronic bike), எலக்ட்ரானிக் கார் (electronic car), வாக்யூம் கிளீனர் (Vaccum cleaner), AC, ஃபேன் (Fan), பல்ப் (Bulb), பேக், டி-ஷர்ட் என்று பல தயாரிப்புகளை விற்பனை செய்கிறது.

Xiaomi தலையணை.. இனி உறக்கத்திற்கு டிஸ்டர்ப் இல்லை.. 1 இல்லை 2 தலையணை..

சியோமி மிஜியா மெமரி ஃபோம் நெக் பில்லோவ் ப்ரோ (Xiaomi Mijia Memory Foam Neck Pillow Pro) மற்றும் சியோமி மிஜியா நேச்சுரல் லேடக்ஸ் நெக் பில்லோவ் ப்ரோ (Xiaomi Mijia Natural Latex Neck Pillow Pro):

இந்த வரிசையில், சியோமி நிறுவனம் இப்போது புதிதாக இரண்டு தலையணையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய தலையணைகளை சியோமி நிறுவனம் சியோமி மிஜியா மெமரி ஃபோம் நெக் பில்லோவ் ப்ரோ (Xiaomi Mijia Memory Foam Neck Pillow Pro) மற்றும் சியோமி மிஜியா நேச்சுரல் லேடக்ஸ் நெக் பில்லோவ் ப்ரோ (Xiaomi Mijia Natural Latex Neck Pillow Pro) என்ற பெயருடன் இப்போது அறிமுகம் செய்துள்ளது.

இந்த இரண்டு புதிய சியோமி தலையணைகளும் (Xiaomi Pillow) புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தலையணைகளும் மிகவும் சவுகரியமான தூக்கத்தை (sleep) வழங்கி, பயனர்கள் முழுமையாக உறக்கத்தில் ஓய்வெடுக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. வழக்கமான தலையணைகள் போல, தட்டையாக இல்லாமல் இது ஸ்மார்ட் வடிவமைப்பை (smart design) பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட் வடிவமைப்பின் மூலம், பயனர்களின் கழுத்து சரியான அழுத்தத்துடன் தலையணையில் கச்சிதமாக பொருந்தும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தலையணைகளை நாம் ஒரு ஆரோக்கியமான சாதனமாக பார்க்கலாம். காரணம், இதில் அவ்வளவு சமாச்சாரங்களை சியோமி நிறுவனம் சேர்த்துள்ளது. வெவ்வேறு தூக்க நிலைகளுக்கு இடமளிக்க தலையணை 9cm மற்றும் 11cm என்ற இரண்டு உயர விருப்பங்களையும் (2 height options) கொண்டுள்ளது.

Xiaomi தலையணை.. இனி உறக்கத்திற்கு டிஸ்டர்ப் இல்லை.. 1 இல்லை 2 தலையணை..

யாரும் எதிர்பார்க்காத விலை.. 1 இல்லை 2 தலையணை அறிமுகம் செய்த சியோமி:

கூடுதலாக, இந்த சியோமி மிஜியா தலையணை (Xiaomi Mijia Pilloe) மேற்பரப்பு 56 x 35cm ஆக பெரிதாக்கப்பட்டுள்ளது, இது நிலையான தலையணை பதிப்போடு (standar version pillow) ஒப்பிடும்போது அதிக கவரேஜை வழங்குகிறது. பொருள் வாரியாக, வெளிப்புற தலையணை உறை (pillow cover) ஒரு தாவர அடிப்படையிலான இழையிலிருந்து (plant-based fiber) தயாரிக்கப்பட்டுள்ளது.

இது காற்றோட்டமான அமைப்பை கொண்டுள்ளது. குறிப்பாக மூச்சுத்திணறல் மற்றும் அலசிய பின் சிதைவை எதிர்க்கும் திறனுடன் செயல்படுகிறது. இந்த சியோமி பில்லோவ்வின் உட்புறத் தலையணை உறை ஈரப்பதத்தை அகற்றி பாக்டீரியா வளர்ச்சியைத் தடுக்க உதவும் சில்வர் அயனி ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்பு (silver ion antimicrobial agent) க்ன்னிட்டேட் மேஷ் துணியை ( knitted mesh fabric) கொண்டுள்ளது.

இது மெமரி ஃபோம் பில்லோவ்விற்கான சிறப்பம்சங்களாகும். அடுத்தபடியாக, சியோமி மிஜியா நேச்சுரல் லேடக்ஸ் நெக் பில்லோவ் பற்றிய விபரங்களை பார்க்கலாம். இது 93% இயற்கையான லேடக்ஸ் பொருளை கொண்டுள்ளது. இது பிரத்தியேகமாக தாய்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட (latex sourced directly from Thailand) பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தலையணையில் காற்றோட்டத்தை உறுதிப்படுத்தும் விதமாக 10,000 சிறிய ஹனிகோம்ப் துளைகள் (honeycomb pores) அமைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் உங்கள் கழுத்து, தோல்பட்டை, மற்றும் தலை பகுதிகளுக்கு வேர்வை உருவாவது குறைக்கப்படுகிறது. அதேபோல், இது கூடுதல் சுகத்தை உங்கள் உடலுக்கு வழங்குகிறது. இதிலும், சியோமி நிறுவனம் அதன் திறமையை காண்பித்துள்ளது. இதன் வெளிப்புற தலையணை உறை சுத்தமான பருத்தியில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. உள்பக்க தலையணை உறை ஈரத்தை உறிஞ்சும் பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கோர் அமைப்பு காற்றோட்டத்தை உறுதி செய்கிறது.

இந்த இரண்டு தலையணைகளும் வேவ் வடிவத்தில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இது 10cm மற்றும் 12cm வளைந்த அமைப்பை கொண்டுள்ளது. இது பின்பக்கம் மற்றும் பக்கவாட்டில் படுக்கும் பழக்கம் கொண்ட மக்களின் கழுத்தில் அழுத்தம் ஏற்படாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை பற்றி பேசுகையில், இரண்டு தலையணைகளும் வெவ்வேறு விலையை பெற்றுள்ளது.

முதலில் சியோமி மிஜியா மெமரி ஃபோம் நெக் பில்லோவ் ப்ரோ (Xiaomi Mijia Memory Foam Neck Pillow Pro) விலை பற்றி பேசுகையில், இது இந்திய மதிப்பில் ரூ. 1,150 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மறுபுறம், சியோமி மிஜியா நேச்சுரல் லேடக்ஸ் நெக் பில்லோவ் ப்ரோ (Xiaomi Mijia Natural Latex Neck Pillow Pro) விலை இந்திய மதிப்பில் ரூ. 1,500 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Mijia Memory Foam Neck Pillow Pro and the Mijia Natural Latex Neck Pillow Pro Price Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X