Home
Gadgets

Xiaomi பாக்கெட் சைஸ் ஷேவர்.. தம்மாத்துண்டு சைசில்.. 60 நிமிட ஷேவிங் டைம்.. டூயல் பிளேடு டெக்னாலஜி.. விலை என்ன?

சியோமி (Xiaomi) நிறுவனம் அதன் கேட்ஜெட்ஸ் (Gadgets) சாதனங்களின் பட்டியலில் மிகவும் கவர்ச்சிகரமான எலெக்ட்ரிக் ஷேவர் (Electric Shaver) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது வழக்கமான ஷேவர் டிவைஸ் போன்ற வடிவமைப்பில் இல்லாமல், மிகவும் சிறிய அளவில் கைக்கு அடக்கமான ஒரு சூப்பர் மினி ஷேவர் டிவைஸ் (Mini Shaver Device) சாதனமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாக்கெட் சைசில் ஸ்லிம் டிஸைனுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய சியோமி மிஜியா எலெக்ட்ரிக் ஷேவர் (Xiaomi Mijia Electric Shaver) பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம்.

பார்ப்பதற்கு ஒரு சிறிய பாக்கெட் பெர்ஃபியூம் (Pocket perfume) போல காட்சியளிக்கும் இந்த சியோமி எலக்ட்ரிக் ஷேவர் (Xiaomi Electric Shaver) சாதனத்தை சியோமி நிறுவனம் இப்போது சியோமி மிஜியா எலெக்ட்ரிக் ஷேவர் டூயல் பிளேடு வெர்ஷன் (Xiaomi Mijia Electric Shaver Dual Blade Version) என்ற பெயருடன் அறிமுகம் செய்துள்ளது. இது மினிமலிஸ்ட் ஐடியாவுடன் (Minimalist idea) காம்பெக்ட் சைஸ் டிசைனில் மிகவும் சிம்பிளான தோற்றத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Xiaomi பாக்கெட் சைஸ் ஷேவர்.. தம்மாத்துண்டு சைஸ்.. 60 நிமிட ஷேவிங் டைம்

சியோமி மிஜியா எலெக்ட்ரிக் ஷேவர் டூயல் பிளேடு வெர்ஷன் (Xiaomi Mijia Electric Shaver Dual Blade Version):

இந்த புதிய சியோமி மிஜியா எலெக்ட்ரிக் ஷேவர் டூயல் பிளேடு வெர்ஷன் (Xiaomi Mijia Electric Shaver Dual Blade Version) சாதனம் பார்ப்பவர்களை ஈர்க்கிறது. இப்படி ஒரு கைக்கு அடக்கமான ஷேவரை இதுவரை நீங்கள் பார்த்திருக்க முடியாது என்று சியோமி விளம்பரம் செய்துள்ளது. இந்த ஷேவர் டூயல் பிளேடு சிஸ்டத்துடன் (Dual blade system) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது மிகவும் நெருக்கமான முடிகளை சுத்தமாகவும் நுணுக்கமாகவும் ஷேவ் (Shave) செய்யும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இது ஐபிஎக்ஸ்7 (IPX7) வாட்டர் ப்ரூஃப் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. இதன் முக்கியமான அம்சங்களை பற்றி பேசுகையில், இதன் டூயல் பிளேடு டிசைன் மிகவும் தனித்துவமான வடிவமைப்பை பெற்றுள்ளது. இதில் உள்ள இரண்டு பிளேடுகளும் வெவ்வேறு விதமான தோற்றத்தை பெறுகிறது. அதேபோல், இவை வெவ்வேறு செயல்பாடுகளுக்காக சிறந்த முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் உள்ள ஒரு பிளேடு வில் வடிவ நீளமான ஷேவராக (Shaver) வருகிறது. இது 0.3mm பற்கள் இடைவெளியைக் கொண்டு மிகக் குறுகிய முடிகளைக் கூட கச்சிதமாக வெட்டும் திறன் கொண்டது. மற்றொரு பிளேடு 55 மைக்ரான் அளவில் அதி மெல்லிய துல்லியமான ஷேவிங்கை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது டீப் ஷேவிங்கை உறுதி செய்ய எலக்ட்ரோஃபார்ம் செய்யப்பட்ட வடிவமைப்பைப் (electroformed design) பயன்படுத்துகிறது

சியோமியின் தம்மாத்துண்டு சைஸ் ஷேவர்.. 60 நிமிட ஷேவிங் டைம்.. டூயல் பிளேடு டெக்னாலஜி அம்சம்:

இந்த சியோமி மிஜியா எலெக்ட்ரிக் ஷேவர், அடர்த்தியான 3 முதல் 5mm அளவு கொண்ட தாடி மற்றும் மீசையை சூப்பர் கிளீனாக ஷேவ் செய்யக்கூடியது என்று சியோமி குறிப்பிட்டு கூறியுள்ளது. இந்த சியோமி மினி ஷேவர் அல்ட்ரா தின் மற்றும் போர்ட்டபிள் டிசைனுடன் ட்ராவல் செய்ய ஏற்றதாக அமைகிறது. இதை உங்கள் பாக்கெட், அல்லது பேக் இல் வைத்து எளிமையாக எங்குவேண்டுமானாலும் எடுத்து செல்லும்படி இது உருவாக்கப்பட்டுள்ளது.

இது மேட் டெக்ஸ்சர் உடன் டச் அம்சத்தை பெறுகிறது. இதன் பிளேடுகளை நீங்கள் நேரடியாக தண்ணீரில் காண்பித்து கழுவிக்கொள்ளலாம். இந்த எலெக்ட்ரிக் ஷேவர் சாதனத்தை பராமரிப்பதும் மிகவும் சுலபமான காரியமே. இந்த சியோமி மிஜியா எலெக்ட்ரிக் ஷேவர் டூயல் பிளேடு வெர்ஷன் (Xiaomi Mijia Electric Shaver Dual Blade Version) சாதனம் வெட் மற்றும் டிரை (wet and dry shaving) என இரண்டு ஷேவிங் முறையையும் ஆதரிக்கிறது.

இந்த சியோமி எலக்ட்ரிக் ஷேவரில் ஜப்பான் அட்வான்ஸ்டு தொழில்நுட்பத்தில் இயங்கும் ஹை-ஸ்பீட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இதன் வேகம் 6500 rpm வரை செல்கிறது. இது 60 நிமிட ஷேவிங் நேரத்தை சிங்கிள் சார்ஜில் வழங்குகிறது. பாஸ்ட் சார்ஜிங் மூலம் வெறும் 3 நிமிட குவிக் சார்ஜிங்கில் உங்களால் 5 நிமிடம் வரை ஷேவ் செய்ய முடியும்.

இந்த சியோமி மிஜியா எலெக்ட்ரிக் ஷேவர் டூயல் பிளேடு வெர்ஷன் (Xiaomi Mijia Electric Shaver Dual Blade Version) சாதனம் சேஃப்டி லாக் அம்சத்தையும் பெறுகிறது. இதன் விலை பற்றி பேசுகையில், இது சீன சந்தையில் $26 டாலர் என்ற விலையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக ரூ. 2000 மட்டுமே. இது விரைவில் இந்தியா வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mijia Electric Shaver Dual Blade With 60 Minute Shaving Time Pocket Shaver Launched Check Price and Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X