Home
Gadgets

Xiaomi-னாலே ஸ்மார்ட் தானே.. ரிமோட்.. டச்.. வாய்ஸ் கண்ட்ரோல்.. 7 விங் பிளேட்.. 100 ஸ்பீட்.. புது Fan என்ன விலை?

சியோமி (Xiaomi) நிறுவனம் அதன் எலக்ட்ரானிக்ஸ் கேட்ஜெட்ஸ் (Xiaomi Electronics Gadgets) வரிசையில் புதிதாக ரிமோட் (remote), டச் (touch) மற்றும் வாய்ஸ் கண்ட்ரோலில் (Voice control) இயங்கும் ஃப்ளோர் ஃபேன் (Fan) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

சியோமி நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து, பல புதிய எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், சியோமி நிறுவனம் இப்போது புதிதாக ஒரு பெடஸ்டல் ஃபேன் (Pedastal fan) சாதனத்தை ஸ்மார்ட் அம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஃபேனின் விலை என்ன? இதில் என்னென்ன ஸ்மார்ட் அம்சங்கள் பேக் செய்யப்பட்டுள்ளது என்பதை இப்போது பார்க்கலாம்.

Xiaomi-னாலே ஸ்மார்ட் தானே.. ரிமோட்.. டச்.. வாய்ஸ் கண்ட்ரோல் Fan..

சியோமி மிஜியா டிசி வேறியபிள் ஃபிரிக்வென்சி ஃப்ளோர் ஃபேன் ப்ரோ (Xiaomi MIJIA DC variable frequency floor fan Pro):

இந்த புதிய ஃபேனை சியோமி மிஜியா டிசி வேறியபிள் ஃபிரிக்வென்சி ஃப்ளோர் ஃபேன் ப்ரோ (Xiaomi MIJIA DC variable frequency floor fan Pro) என்ற பெயருடன் சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஃபேன் கடந்த 2022 இல் அறிமுகம் செய்யப்பட்ட மிஜியா டிசி ஃபேன் (MIJIA DC fan) இன் அப்கிரேட் செய்யப்பட்ட வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மிஜியா டிசி வேறியபிள் ஃபிரிக்வென்சி ஃப்ளோர் ஃபேன் ப்ரோ அல்ட்ரா தின் டிஸைனுடன் வெறும் 8.7 cm அடர்த்தியுடன் வந்துள்ளது. இது EPP ஸ்டோரேஜ் பாக்ஸ் உடன் வருகிறது. இந்த புதிய சியோமி ஃபேன் சாதனம் 7 விங் பிளேட் (7 wing blade design) டிஸைனுடன் நிலையான காற்றை வழங்குகிறது. இது 1 நிமிடத்திற்கு 25 கியூபிக் மீட்டர் அளவில் காற்றை வழங்குகிறது.

இந்த புதிய சியோமி மிஜியா டிசி வேறியபிள் ஃபிரிக்வென்சி ஃப்ளோர் ஃபேன் ப்ரோ சாதனம் 100 விதமான வெவ்வேறு ஸ்பீட் (100 different speed fan) இல் இயங்கக்கூடியது. இந்த பேன் ரிமோட் கண்ட்ரோல் (remote control fan) உடன் வருகிறது. இது டச் கண்ட்ரோல் அம்சத்தையும் ஆதரிக்கிறது. இன்னும் ஒரு படி மேலே சென்று, சியோமி நிறுவனம் இந்த ஃபேன் இல் வாய்ஸ் கண்ட்ரோல் அம்சத்தையும் வழங்கியுள்ளது.

Xiaomi-னாலே ஸ்மார்ட் தானே.. ரிமோட்.. டச்.. வாய்ஸ் கண்ட்ரோல் Fan..

ரிமோட்.. டச்..வாய்ஸ் கண்ட்ரோல் உடன் இந்த சியோமி ஃபேன் விலை என்ன?

ஆம், உங்கள் குரலில் நீங்கள் கட்டளையிடும் கட்டளைகளுக்கு இந்த சியோமி ஃபேன் இணங்கி வேலை செய்யும். உங்கள் விருப்பத்தின் படி சொல்பேச்சு கேட்டு நடக்கும் திறன் கொண்டது. ரிமோட் அருகில் இல்லை என்றால் உங்கள் குரலை எழுப்பி இந்த ஃபேனை நீங்கள் கட்டுப்படுத்தலாம். இந்த பேன் மூலம் உங்கள் போனை கூட நீங்கள் சார்ஜ் செய்யலாம். ஆம், இதில் 18W டைப்-சி மொபைல் பவர் சப்ளை (Mobile power-supply) உள்ளது.

இது 26.8 dB என்ற மிகவும் குறைந்த சத்தத்துடன் இயங்குகிறது. இந்த சியோமி மிஜியா டிடி ஃப்ளோர் ஃபேன் (Xiaomi MIJIA DC floor fan) சாதனை உங்கள் வீட்டில் உள்ள ஏசி (AC) உடன் பயன்படுத்தினால், உங்கள் அறை முழுக்க குளிர்ந்த காற்று பரப்பப்படும் என்று சியோமி தெரிவித்துள்ளது. இந்த அட்டகாசமான ஸ்மார்ட் ஃப்ளோர் ஃபேன் விலை பற்றி பேசுகையில் இது $55 டாலர் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய மதிப்பில் இதன் விலை ரூ. 4500 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சாதனத்தை சியோமி சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் உலக நாடுகளுக்கும் இந்திய சந்தைக்கும் இந்த டிவைஸை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்யுமென்று தெரிவித்துள்ளது. வெறும் 4000 ரூபாய் விலையில் இப்படி ஒரு ஸ்மார்ட் பேன் கிடைத்தால் வேண்டாமென்றா சொல்லப்போகிறோம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi MIJIA DC Variable Frequency Floor Fan Pro With Remote Touch Voice Control 7 Wing Blade Design 100 Speed Launched
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X