Home
Gadgets

Xiaomi மாஸ்.. மினி ஃபிரிட்ஜ் போன்ற டிவைஸ் அறிமுகம்.. ரூ. 900 விலையில் இப்படி ஒரு Kettle-ஆ? சூப்பர்ப்பா..

சியோமி (Xiaomi) நிறுவனம் புதிதாக அதன் கேட்ஜெட்ஸ் (Gadgets) தயாரிப்பில் புதிதாக மிஜியா கோல்டு வாட்டர் கெட்டில் (Mijia Cold Water Kettle) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது வெப்பமான காலத்தில் மக்களுக்கு சிறிய பிரிட்ஜ் (Mini Fridge) போல செயல்படுகிறது. உண்மையை சொல்ல போனால் பிரிட்ஜ் இல்லாமல் உங்களுக்கு தண்ணீர் (Water), ஜூஸ் (Juice), கோல்டு டீ (Cold Tea), கோல்டு காபி (Cold Coffee) போன்றவற்றை இந்த சாதனத்தின் மூலம் நீங்கள் உருவாக்கலாம். இந்த புதிய டிவைஸ் பற்றிய விலை மற்றும் முழு விபரம் இதோ.

சியோமி நிறுவனத்தின் மிஜியா கேட்ஜெட்ஸ் தயாரிப்பு வரிசையில், புதிய சேர்ப்பாக சேர்க்கப்பட்டுள்ள புதிய சாதனம் தான் இந்த சியோமி மிஜியா கோல்டு வாட்டர் கெட்டில் (Xiaomi Mijia Cold Water Kettle) டிவைஸ். உங்கள் வீட்டில் ஒரு சிறிய இடமிருந்தால் போதும், இந்த சாதனத்தை நீங்கள் வாங்கி பயன்படுத்தலாம். இதன் அளவு வெறும் 95mm அளவு மட்டுமே உள்ளது.

Xiaomi மாஸ்.. மினி ஃபிரிட்ஜ் போன்ற டிவைஸ் அறிமுகம்.. சூப்பர்ப்பா..

சியோமி மிஜியா கோல்டு வாட்டர் கெட்டில் (Xiaomi Mijia Cold Water Kettle):

சியோமியின் இந்த கெட்டில் (Xiaomi Kettle) சாதனம் வழக்கமான கெட்டில் போல தண்ணீரை சூடு பண்ண (hot water kettle) பயன்படுத்தப்படுவதில்லை. இது மாறாக, தண்ணீரை குளிர்விக்கிறது. சியோமி நிறுவனத்தின் மாத்தி யோசி ஐடியாவின் படி இந்த கெட்டில் சாதனத்தை நிறுவனம் தண்ணீரை பிரிட்ஜ் (Fridge) இல்லாமல் குளிர்விக்கும் படி உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு மினி பிரிட்ஜ் போல செயல்படுகிறது.

சில நிமிடங்களில் இந்த சியோமி மிஜியா கோல்டு வாட்டர் கெட்டில் (Xiaomi Mijia Cold Water Kettle) சாதனம் எல்லா திரவங்களை கூல் செய்கிறது. இது லீக்ப்ரூஃப் டிஸைனுடன் (Leakproof design), சிலிக்கான் சீல்லிங் ரிங் (Silicone sealing ring) மற்றும் மினிமலிஸ்ட் டிசைன் (Minimalist design) உடன் வருகிறது. இந்த கெட்டில் சாதனத்தை நீங்கள் தலைகீழாக நிறுத்தி கூட பயன்படுத்தலாம்.

நீங்கள் எப்படி இந்த மிஜியா கோல்டு வாட்டர் கெட்டில் சாதனத்தை வைத்து பயன்படுத்தினாலும், அதிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட வெளியே வராதாம். இந்த சாதனத்தின் உள்ளே சியோமி நிறுவனம் மற்றொரு சிறிய ப்ரயூ பில்டரை (Brew filter) வழங்கியுள்ளது. இதன் மூலம் கோல்டு டீ, காபி போன்றவற்றை உருவாக்க அனுமதிக்கிறது. இதன் ப்ரயூ கம்பார்ட்மெண்ட் 300 மெஷ் பில்டர் ஸ்கிரீன் உடன் வருகிறது.

மினி ஃபிரிட்ஜ் போல செயல்படும் கோல்டு வாட்டர் கெட்டில்:

இதனால், பில்டரிங் மிகவும் சுத்தமாக நடக்கிறது. இந்த கெட்டில் பாடி உணவு பாதுகாப்புடன் வரும் ஏஎஸ் மெட்டீரியல் (AS Material) உடன் வருகிறது. இது மிகவும் உறுதியானது உடையாது. கூல் ட்ரிங்க்ஸ்களை ஸ்டோர் செய்து வைக்க ஏற்றது. இந்த சாதனம் -10°C to 92°C வரை வெப்பத்தை தாங்கக்கூடியது. முக்கிய குறிப்பாக, இந்த சாதனத்தின் பில்டர்களை பயனர்கள் சூடு நீரில் காண்பிக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சியோமி மிஜியா கோல்டு வாட்டர் கெட்டில் (Xiaomi Mijia Cold Water Kettle) சாதனம் இன்பில்ட் ஸ்கேல் உடன் வருகிறது. இந்த அளவு மூலம் சரியான பானங்களை உங்களால் பயன்படுத்த முடியும். இந்த Xiaomi Mijia Cold Water Kettle சாதனத்தை நிறுவனம் தற்போது 11 டாலர் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ. 900 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் விரைவில் இது எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Mijia Cold Water Kettle Works Like Mini Fridge With 1.6L Capacity Launched Check Price and Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X