Home
Gadgets

Xiaomi வெளியிட்ட AC.. கரண்ட் பில் பற்றி கவலையே வேண்டாம்.. விற்பனையில் மாஸ் காட்டுது.. விலை என்ன?

சியோமி (Xiaomi) நிறுவனம் புதிதாக ஒரு ஏசி (AC) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஏசி சாதனத்தை சியோமி நிறுவனம் சியோமி மிஜியா ஏர் கண்டிஷனர் சூப்பர் எனர்ஜி சேவிங் 3 எச்பி வால்மாவுண்டட் யூனிட் (Xiaomi Mijia Air Conditioner Super Energy Saving 3-HP Wall-Mounted Unit) என்ற பெயருடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஏர் கண்டிஷனர் (AC) சாதனத்தை சியோமி நிறுவனம் இன்று முதல் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதன் விலை என்ன? இதன் சிறப்பம்சம் என்ன? என்பதை இப்போது தெரிந்துகொள்ளலாம்.

சியோமி நிறுவனம் சியோமி மிஜியா ஏர் கண்டிஷனர் சூப்பர் எனர்ஜி சேவிங் 3 எச்பி வால்மாவுண்டட் யூனிட் (Xiaomi Mijia Air Conditioner Super Energy Saving 3-HP Wall-Mounted Unit) மாடல் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இது மிக சிறந்த APF வேல்யூவை பெற்றுள்ளது. இது 4.55 என்ற APF வேல்யூவை பெறுகிறது. இது முதல் லெவல் எனர்ஜி ஏஃபிசியன்சி வேல்யூவான 4.20 கணக்கை தாண்டி செயல்படுகிறது.

Xiaomi வெளியிட்ட AC.. கரண்ட் பில் கவலையே வேண்டாம்.. மாஸ் காட்டுது..

சியோமி மிஜியா ஏர் கண்டிஷனர் சூப்பர் எனர்ஜி சேவிங் 3 எச்பி வால்மாவுண்டட் யூனிட் (Xiaomi Mijia Air Conditioner Super Energy Saving 3-HP Wall-Mounted Unit):

இதன் பொருள், வழக்கமான ஏசி சாதனங்களை விட, இந்த சியோமி ஏசி சாதனம் மிகவும் குறைந்த அளவு மின்சாரத்தை எடுத்துக்கொள்கிறது. அதிகப்படியான மின்சாரத்தை மிச்சம்பிடிக்கிறது. இந்த புதிய சியோமி மிஜியா ஏர் கண்டிஷனர் சூப்பர் எனர்ஜி சேவிங் 3 எச்பி வால்மாவுண்டட் சாதனம் 578 kWh என்றளவு ஒரு ஆண்டு மின்சாரத்தை மிச்சம்பிடிக்கிறது. இது புதிய மூன்றாம் லெவல் ரேட்டிங்கிற்கு சமமானது.

இந்த புதிய சியோமி மிஜியா ஏர் கண்டிஷனர் சூப்பர் எனர்ஜி சேவிங் 3 எச்பி வால்மாவுண்டட் சாதனம் முழு டிசி ஃபிரிக்வென்சி கன்வெர்ஷன் டெக்னாலஜி (full DC frequency conversion technology) என்ற தொழில்நுட்பத்துடன் மிகவும் ஸ்மூத்தாக வேலை செய்கிறது. இதன் செல்ஃப் டெவெலப் ஏர் டக்ட் டிசைன் (air duct design) காற்றோட்டத்தை சிறப்பானதாக மாற்றுகிறது.

இந்த சியோமி மிஜியா ஏர் கண்டிஷனர் சூப்பர் எனர்ஜி சேவிங் 3 எச்பி வால்மாவுண்டட் யூனிட் (Xiaomi Mijia Air Conditioner Super Energy Saving 3-HP Wall-Mounted Unit) சாதனம் ரேப்பிட் கூலிங் அம்சத்துடன் செயல்படுகிறது. இது 40 வினாடிகளில் கூலிங் அம்சத்தையும், 80 விண்டிகளில் ஹீட்டிங் அம்சத்தையும் தருகிறது. ஆம், இந்த ஏசி சாதனம் குளிர்ந்த காற்றுடன், ஹீட்டர் மோடில் சூடான காற்றையும் தருகிறது.

சியோமி மிஜியா ஏசி விலை (Xiaomi Mijia AC Price):

இது -35°C உடன் ஹீட்டிங் வெப்பத்திலும் மற்றும் கூலிங் உடன் 60°C வரை வெப்பத்தில் செயல்படுகிறது. இது பயனர்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த, இந்த ஏசி சாதனம் உயர் வெப்ப ட்ரை க்ளீனிங் அம்சத்தையும் கொண்டுள்ளது. இதன் மூலம் ஏசி இல் உருவாகும் கிருமிகள் மற்றும் மோல்ட்களை இது 99.9% நீக்கம் செய்து, உங்கள் அறையின் காற்றை எப்போதும் சுத்தமாக வைக்கிறது.

நீங்கள் சுத்தம் செய்ய மறந்தாலும், இந்த சியோமி ஏசி அதன் ஆட்டோமேட்டிக் இன்டலிஜெண்ட் கிளீனிங் ரீமைண்டர் உடன் வருகிறது. உங்களை சுத்தம் செய்ய நினைவூட்டுகிறது.இது மேட் ஃபினிஷ் உடன் வட்ட வடிவ LED ஸ்கிரீன் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதன் விலை பற்றி பேசுகையில், இந்த சாதனம் இந்திய மதிப்பில் ரூ. 49,000 விலையில் சீனாவில் இப்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவில் இது விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Mijia Air Conditioner Super Energy Saving 3 HP Wall Mounted Unit Sale Check Price and Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X