சியோமி அறிமுகம் செய்த புதிய AC.. ஹைப்பர்ஓஎஸ்.. rapid கூலிங்.. எந்த மாடல்? என்ன விலை?
சியோமி நிறுவனம் தொடர்ந்து அசத்தலான சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனங்களுக்கும் இந்தியா மற்றும் சீனாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சியோமி நிறுவனம் தனது புதிய சியோமி மிஜியா ஏர் கண்டிஷனர் ப்ரோ (Xiaomi Mijia Air Conditioner Pro) மாடலை அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக இந்த புதிய ஏசி மாடல் தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த சியோமி மிஜியா ஏர் கண்டிஷனர் ப்ரோ அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது சயோமி நிறுவனத்தின் புதிய ஏசி மாடலின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

சியோமி மிஜியா ஏர் கண்டிஷனர் ப்ரோ (Xiaomi Mijia Air Conditioner Pro 1.5HP specification): இந்த ஏசி ரேபிட் கூலிங் (Rapid cooling) மற்றும் ரேபிட் ஹீட்டிங் (Rapid heating) அம்சத்துடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இது உங்கள் அறையை வெறும் 30 வினாடிகளில் முழுமையாகக் குளிர்விக்கிறது மற்றும் 60 வினாடிகளில் சூடாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்த ஏசி மேலே வெளியேற்றும் காற்றோட்ட வடிவமைப்பைப் பயன்படுத்துகிறது. பின்பு 7 மீட்டர் ரேஞ்ச் ( 7-meter range)), 180 டிகிரி பில்ட் ஆஃப் வியூவில் (180° field of view) மனித இருப்பைக் கண்டறிந்து மென்மையான குளிர்ச்சியை வழங்குகிறது இந்த ஏசி மாடல். குறிப்பாக இந்த ஏசி மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
இது ஒரு இடத்தில் வெப்பம் மற்றும் குளிர் பொறுத்து சிறப்பாகச் செயல்படும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 35°C ஹீட்டிங் மோடிலும் (heating mode) மற்றும் கூலிங் மோடில் (cooling mode) 65°C வரை சிறப்பாக செயல்படக்கூடியது. மேலும் சியோமி ஹைப்பர் ஓஎஸ் கனெக்ட் (Xiaomi HyperOS Connect device) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஏசி மாடல்.
அதுவும் Xiao AI வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் Mijia app மூலம் இந்த சியோமி மிஜியா ஏர் கண்டிஷனர் ப்ரோ மாடலை இயக்க முடியும். குறிப்பாக டூயல் மில்லிமீட்டர் வேவ் ரேடார் சென்சார் (dual mmWave radar sensors) ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. இது நீங்கள் அறையை விட்டு வெளியேறும்போது புத்திசாலித்தனமாக ஏசி வெளியே வருவதை ஆப் செய்துவிடும் என நிறுவனம் கூறுகிறது.
குறிப்பாக மற்ற ஏசி மாடல்களை விட இந்த சியோமி ஏசி மாடல் ஆண்டுக்கு சுமார் 361 kWh மின்சாரத்தை மிச்சம்பிடிப்பதாக சியோமி தெரிவித்துள்ளது. மேலும் இது அமைதியாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த AC மாடல் 18 டெசிபல் (18 decibels) அளவிற்கும் குறைவான மிகவும் குறைந்த அளவிலான இரைச்சலை (noise) கொண்டுள்ளது.
சியோமி மிஜியா ஏர் கண்டிஷனர் ப்ரோ 1.5எச்பி (Mijia Air Conditioner Pro 1.5HP) மாடலின் விலை CNY 3,999 (இந்திய மதிப்பில் ரூ.46,830) ஆக உள்ளது. தற்போது இந்த ஏசி மாடல் சீனாவில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த ஏசி மாடல் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஏசி மாடல் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு இருக்கும். அதேபோல் விரைவில் சியோமி நிறுவனம் இந்தியாவில் பல அசத்தலான சாதனங்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








