Home
Gadgets

Xiaomi நின்னுட்டாப்ல.. கெத்தா நின்னு பேசும் 3 டன் AC.. ஓட்டை போடாம எந்த ரூமில் வேண்டுமானாலும் யூஸ் செய்யலாம்

சியோமி (Xiaomi) நிறுவனம் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி செங்குத்தாக நிற்கும் ஏசி (AC) மாடலை அறிமுகம் செய்துள்ளது. 1 டன், 2 டன் (Ton) இல்லை, கெத்தாக 3 டன் கொள்ளளவை கொண்ட சக்தி வாய்ந்த AC மாடலை அறிமுகம் செய்துள்ளது.

சியோமி நிறுவனம் புதிதாக மிஜியா ஏர் கண்டிஷனர் ஃபிரெஷ் ஏர் ப்ரோ டூயல் அவுட்லெட் (Mijia Air Conditioner Fresh Air Pro Dual Outlet) என்ற வெர்ட்டிக்கல் ஏசி (Vertical AC) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிமுகம் வரும் மே மாதம் நடைபெறும் என்று சியோமி தெரிவித்துள்ளது. அதற்கு முன்பாக, சில லீக் தகவல்களை வெளியிட்டுள்ளது.

Xiaomi நின்னுட்டாப்ல.. கெத்தா நின்னு பேசும் 3 டன் AC..

சியோமி மிஜியா ஏர் கண்டிஷனர் ஃபிரெஷ் ஏர் ப்ரோ டூயல் அவுட்லெட் (Xiaomi Mijia Air Conditioner Fresh Air Pro Dual Outlet):

சியோமி மிஜியா ஏர் கண்டிஷனர் ஃபிரெஷ் ஏர் ப்ரோ டூயல் அவுட்லெட் பற்றி நமக்கு தெரிந்த விபரங்கள் இதோ. இது வழக்கமாக சந்தையில் வாங்க கிடைக்கும் ஸ்ப்ளிட் ஏசி (Split AC) மற்றும் விண்டோ ஏசி (Window AC) போன்ற சாதனமல்ல என்பதை கவனிக்க வேண்டும். இது டவர் ஃபேன் (Tower Fan) போல செங்குத்தாக தனித்து நிற்கும் ஏசி மாடலாகும்.

இந்த புது வகை வெர்ட்டிக்கல் ஏர் கண்டிஷனர் (Vertical Air Conditioner) என்றழைக்கப்படும் வெர்ட்டிக்கல் ஏசியை உங்கள் வீட்டில் பயன்படுத்த, சுவரில் எந்தவித துளைகளையும் (holes) நீங்கள் இட வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை அப்படியே வாங்கி, செங்குத்தாக உங்களுக்கு விருப்பமான அறையில் நிற்கவைத்து பயன்படுத்திக்கொள்ளலாம். இது டூயல் அவுட்புட் அம்சத்துடன் வருகிறது. இது கிளாஸ் 1 எனர்ஜி சேவிங் அம்சத்துடன் வருகிறது.

இந்த மிஜியா வெர்ட்டிக்கல் ஏர் கண்டிஷனர் ஸ்டார்லைட் சில்வர் கலர் (Starlight Silver color) நிறத்தில் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. சியோமி வெளியிட்டுள்ள புதிய சியோமி மிஜியா வெர்ட்டிக்கல் ஏர் கண்டிஷனர் தரமான கூலிங்கை டூயல் ஏர் அவுட்புட் அம்சத்தை கொண்டுள்ளது. இதுவொரு 3-டன் திறன் கொண்ட AC (3-ton AC) என்பது குறிப்பிடத்தக்கது. இது 1930W குளிரூட்டும் சக்தி மற்றும் 2680W வெப்பமூட்டும் திறன் என இரண்டையும் வழங்குகிறது.

Xiaomi நின்னுட்டாப்ல.. கெத்தா நின்னு பேசும் 3 டன் AC..

3 டன் ஏசியா இருந்தாலும் கரண்ட் பில் ரொம்ப கம்மி.. ஏன் தெரியுமா?

இது பெரிய இடங்களுக்கு ஏற்றதாக அமைகிறது. இந்த சியோமி ஏசி (Xiaomi AC) ஆனது எனர்ஜி சேவிங் உடன் கிளாஸ் 1 ஆற்றல் செயல்திறனை வழங்குகிறது. இதன் பொருள் இந்த ஏசி சாதனம் குறைந்தபட்ச மின் நுகர்வுடன் செயல்படுகிறது. உங்கள் சுற்றுச்சூழல் தாக்கம் மற்றும் மின்சார பயன்பாட்டு பில்களைக் (current bill) குறைக்கிறது. சுற்றுப்புற வெப்பநிலைக்கு ஏற்றவாறு, இது கூலிங்கை தானாக அட்ஜஸ்ட் செய்கிறது.

தேவைக்கேற்ற வெப்பத்தை தணிக்கும் கூலிங்கை வழங்குவதால், கரண்ட் யூனிட்டை தானாகவே அதன் மின்சார எடுத்து ஆன் செய்து மற்றும் ஆஃப் (automatic ON and OFF) செய்கிறது. இந்த ஏசி மே மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில், ரூ. 1,01,156 விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையில் ஒரு சிறந்த ஏசி சாதனமாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Mijia Air Conditioner Fresh Air Pro Dual Outlet 3 Ton Vertical AC Launch Details Price and Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X