Xiaomi டக்கர் டோய்.. சிங்கிள் டச் Washing Machine.. வெறும் 8Kg தான்.. ரூ.7000 விலையில் சூப்பர் வாஷிங் மெஷின்..
சியோமி (Xiaomi) நிறுவனம் அதன் எலெக்ட்ரினிக்ஸ் சாதனம் வரிசையில் புதிய வாஷிங் மெஷின் சாதனத்தை சேர்த்துள்ளது. இது சியோமி நிறுவனம் சியோமி மிஜியா 8Kg ட்ரம் வாஷிங் மெஷின் (Xiaomi Mijia 8Kg Drum Washing Machine) என்ற பெயருடன் வெளிவந்துள்ளது.
சியோமி அறிமுகம் செய்துள்ள இந்த புதிய சியோமி மிஜியா 8Kg ட்ரம் வாஷிங் மெஷின் (Xiaomi Mijia 8Kg Drum Washing Machine) சாதனம் சிங்கிள் பட்டன் குயிக் ஸ்டார்ட் வாஷிங் (one-button quick start) மற்றும் லாங் பிரஸ் ஃபார் ஸ்மார்ட் வாஷ் என்ற இரண்டு பிரத்தியேக வாஷிங் ஃபங்க்ஷன் (long press for smart wash) அம்சங்களை கொண்டுள்ளது.

சியோமி மிஜியா 8Kg ட்ரம் வாஷிங் மெஷின் (Xiaomi Mijia 8Kg Drum Washing Machine):
சியோமி என்றால் சும்மாவா, சாதாரண சாதனத்தையே எதாவது சில மாற்றங்களை செய்து மக்களின் தேவையை பூர்த்தி செய்து, அசத்திவிடும் தானே. அப்படி இந்த வாஷிங் மெஷின் சாதனத்தில் சியோமி நிறுவனம் புதிதாக இன்டெலிஜெண்ட் ஃபஸ்ஸி வெய்யிங் ஆட்டோமேட்டிக் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. நீங்கள் வாஷிங் மெஷினில் எத்தனை கிலோ எடை கொண்ட துணிகளை வைத்துளீர்கள் என்று கணக்கு செய்து, அந்த துணிகளுக்கு ஏற்ற அளவு தண்ணீரை மட்டும் எடுத்துக்கொள்கிறது.
இந்த அம்சம் மூலம் உங்களுக்கு தண்ணீர் வீணாகாமல் மிச்சமாகிறது. உதாரணமாக 8 கிலோ ட்ரம்மில் நீங்கள் வெறும் 5 கிலோ துணியை மட்டுமே துவைக்க பயன்படுத்துகிறீர்கள் என்றால், இந்த புதிய சியோமி மிஜியா 8Kg ட்ரம் வாஷிங் மெஷின் சாதனத்தில் உள்ள இன்டலிஜெண்ட் அம்சம் வெறும் 5 ஜிலோ துணியை துவைக்க எவ்வளவு தண்ணீர் தேவையோ அதை மட்டும் எடுத்துக்கொள்கிறது.
அதேபோல், இந்த சியோமி மிஜியா 8Kg ட்ரம் வாஷிங் மெஷின் சாதனம் தண்ணீரை மட்டுமின்றி மின்சாரத்தையும் குறைவாக பயன்படுத்துகிறது. இதனால், உங்கள் மின்சார கட்டணம் அதிகமாக குறைகிறது என்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய வாஷிங் மெஷின் டூ-இன்-ஒன் வாஷிங் மோடை ஆதரிக்கிறது.

வெறும் 8Kg தான்.. ரூ.7000 விலையில் சூப்பர் வாஷிங் மெஷின்:
வாஷிங் மற்றும் நீரை நீக்கும் டூ-இன்-ஒன் செயல்முறையைப் பயன்படுத்துவதன் மூலம் மிஜியா பாரம்பரிய சலவை முறைகளிலிருந்து விலகிவிட்டதாக Xiaomi கூறுகிறது. இதன் பொருள் நீர் உள்ளீடு, அலசல் மற்றும் உலரவைப்பது போன்ற விஷயங்களை ஒரே நேரத்தில் நடக்கும் படி சியோமி இந்த சாதனத்தை உருவாக்கியுள்ளது. இதனால், துணிகளில் சோப்பு துகள்கள் எஞ்சியிருக்காது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய சியோமி மிஜியா 8Kg ட்ரம் வாஷிங் மெஷின் (Xiaomi Mijia 8Kg Drum Washing Machine) சாதனம் 99.6% கிருமிகளை நீக்குகிறது. இது உயர் அழுத்தம் கொண்ட வாட்டர் ஜெட் ஸ்ப்ரே அம்சத்தை கொண்டுள்ளது. இதன் மூலம் வாஷிங் மெஷின் உள்பக்க ட்ரம் மற்றும் வெளிப்பாக ட்ரம் இரண்டுமே சுத்தம் சேய்யப்படுகிறது. இதனால், கிருமிகள் உருவாகுவது தடுக்கப்படுகிறது.
இந்த புதிய சியோமி மிஜியா 8Kg ட்ரம் வாஷிங் மெஷின் (Xiaomi Mijia 8Kg Drum Washing Machine) விலை பற்றி பேசுகையில், இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 7,999 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இப்போது இந்த சாதனம் சீனாவில் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. உலக சந்தை மற்றும் இந்திய சந்தையின் விற்பனை விபரங்களை இன்னும் சியோமி வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications








