Home
Gadgets

Xiaomi வெர்ட்டிக்கல் AC.. துளையிட வேண்டாம்.. டேபிள் ஃபேன் மாதிரி இனி ஏசி.. யூஸ் பண்ணலாம்.. என்ன விலை?

சியோமிக்கு (Xiaomi) தெரியாத விஷயமா? ஏசி (AC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஏர் கண்டிஷனர் (Air Conditioner) இப்போது உலகவில் எல்லா நாடுகளிலும் அதிகமாக தேவைப்பட துவங்கியுள்ளது. காரணம் உலகளவில் வெப்பம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

என்ன தான் ஏசி தேவைப்பட்டாலும், எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஏசி மாடல் பயன்பெறாது. சிலருக்கு ஸ்ப்ளிட் ஏசி (Split AC) மாடல் தான் மிகச்சரியான தேர்வாக அமையும். இன்னும் சிலருக்கு விண்டோவ் ஏசி (Window AC) மாடல் தான் மிகச்சரியான தேர்வாக அமையும். ஒவ்வொரு இருப்பிடம் மற்றும் பயன்பாட்டாளரின் தேவைக்கு ஏற்ப ஏசி மாடல்களை மக்கள் இப்போது தேர்வு செய்து வருகிறார்கள்.

Xiaomi வெர்ட்டிக்கல் AC.. துளையிட வேண்டாம்.. டேபிள் ஃபேன் மாதிரி ஏசி..

சியோமி மிஜியா 3எச்பி டூயல் எக்ஸ்ஹாஸ்ட் ஏர் கண்டிஷனர் ப்ரோ (Xiaomi MIJIA 3HP dual-exhaust air conditioner Pro):

இந்த இரண்டு ஏசி மாடல்களுக்கு மத்தியில் இப்போது புதிதாக வெர்ட்டிக்கல் ஏசி (Vertical AC) மாடலின் விற்பனை கணிசமாக அதிகரித்து வருகிறது. வெர்ட்டிக்கல் ஏசியா? அப்படி என்றால் என்ன என்று சிலர் சந்தேகத்துடன் கேட்கலாம். வெர்ட்டிக்கல் ஏசி என்பது வேறொன்றும் இல்லை மக்களே. டேபிள் ஃபேன் (Table Fan) போல செங்குத்தாக எந்தவித பிடிப்பு தேவையும் இல்லாமல் தானாக நின்று இயங்கும் ஒரு ஏசி சாதனமாகும்.

இத்தகைய விதியசமான ஏசியை தான் இப்போது சியோமி நிறுவனம் அதன் சொந்த சந்தையான சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஏசியை சியோமி நிறுவனம் சியோமி மிஜியா 3எச்பி டூயல் எக்ஸ்ஹாஸ்ட் ஏர் கண்டிஷனர் ப்ரோ (Xiaomi MIJIA 3HP dual-exhaust air conditioner Pro) என்ற பெயருடன் அறிமுகம் செய்துள்ளது.

இதை நிறுவனம் சியோமி மிஜியா டூயல் அவுட்லெட் ஏர் கண்டிஷனர் சீரிஸ் (Xiaomi MIJIA dual-outlet air conditioner) கீழ் 2 மாடலாக அறிமுகம் செய்துள்ளது. இதில் நேச்சுரல் ஏர் ப்ரோ (Natural Air Pro) மற்றும் பிரெஷ் ஏர் ப்ரோ வெர்ஷன் (Fresh Air Pro versions) என்று இரண்டு வித்தியாசமான மாடல்களை நிறுவனம் கொண்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.

Xiaomi வெர்ட்டிக்கல் AC.. துளையிட வேண்டாம்.. டேபிள் ஃபேன் மாதிரி ஏசி..

இனி டேபிள் ஃபேன் மாதிரி ஏசியை நிற்க வைத்து யூஸ் பண்ணலாம்:

இந்த ஏசியை பயன்படுத்த, உங்கள் வீட்டின் அறையில் நீங்கள் ஒரு சிறிய துளை (hole) கூட இட வேண்டிய அவசியமில்லை என்பது கவனிக்கத்தக்கது. இதை அப்படியே வாங்கி, செங்குத்தாக உங்களுக்கு விருப்பமான அறையில் நிற்கவைத்து (standing AC) பயன்படுத்திக்கொள்ளலாம். இது டூயல் அவுட்புட் அம்சத்துடன் வருகிறது. இது 40% மின்சாரத்தை மிச்சம்பிடிக்கும் எனர்ஜி சேவிங் அம்சத்துடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய ஏர் கண்டிஷனரில் ஃப்ளையிங் விங் பயோனிக் டூயல் ஏர் வென்ட்ஸ் (flying wing bionic dual air vents) மற்றும் லிங்யுன் இன்டலிஜென்ட் கண்ட்ரோல் எஞ்சின் உடன் வருகிறது. இது ஒரு மணி நேரத்திற்கு 1,710 சதுர மீட்டர் காற்றின் அளவை வழங்கும் திறன் கொண்டது. காற்று விநியோகத்திற்காக 160 டிகிரி அல்ட்ரா-வைட் கோணத்தை ஆதரிக்கிறது. இது நான்கு-மண்டல சுயாதீன காற்று கட்டுப்பாட்டை ஆதரிக்கிறது.

மேம்படுத்தப்பட்ட வழங்க இதில் இன்பில்ட்டாக பாக்டீரியா ரெஸிஸ்டண்ட் மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்பு பில்டர்களை கொண்டுள்ளது. இது சுத்தமான காற்றை வழங்கி உங்கள் அறையை சுவாசிக்க மிகவும் ஆரோக்கியமான இடமாக மாற்றுகிறது. இதன் விலை பற்றி பேசுகையில், சியோமி நிறுவனம் Xiaomi MIJIA 3 HP super energy-efficient dual outlet air conditioner Pro மாடலை இந்திய மதிப்பில் ரூ. 78,499 விலை என்று ஆரம்ப விலையில் வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Mijia 3HP Dual Exhaust Air Conditioner Pro Series Vertical AC Launched Check Specs and Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X