Home
Gadgets

தீபாவளிக்கு முன்பே சரவெடி ஆஃபர் கொடுத்த பிளிப்கார்ட்.. ரூ.16,999 பட்ஜெட்ல 50-இன்ச் சியோமி டிவி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் big festive dhamaka எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் டிவிகள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதேபோல் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சியோமி 50 இன்ச் 4கே டிவிக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் சியோமி எம்ஐ எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (Xiaomi X Series 50 inch 4K Smart TV) மாடலுக்கு 62 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த சியோமி டிவியை ரூ.15499 விலையில் வாங்கிவிட முடியும்.

தீபாவளி ஆஃபர்.. ரூ.16,999 பட்ஜெட்ல 50-இன்ச் சியோமி டிவி.. எந்த மாடல்?

சியோமி எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் 4கே டிவி அம்சங்கள் (Xiaomi X Series 50 inch 4K Smart TV Specifications): இந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அதேபோல் 94 சதவீதம் டிசிபிஐ-3 கலர் காமட் (94% DCPI-3 color gamut), ஏஎல்எல்எம் (ALLM), எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology), விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine), டால்பி விஷன் டைம் (Dolby Vision Time), 6.5எம்எஸ் ரெஸ்பான்சஸ் டைம் (6.5ms Response Time) உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.

தரமான குவாட் கோர் பிராசஸர் (ஏ55) உடன் சியோமி எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் 4கே டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவிகளை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதாவது இந்த பிராசஸர் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் மாலி ஜி52 எம்சி1 ஜிபியு (Mali G52 MC1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த சியோமி டிவி.

குறிப்பாக 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் உடன் சியோமி எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் 4கே டிவி வெளிவந்தது. அதேபோல் ஆண்ட்ராய்டு டிவி 10 (Android TV 10) இயங்குதள வசதியுடன் இந்த டிவி அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் பெசல்-லெஸ் டிசைன் கொண்டுள்ளது இந்த அசத்தலான சியோமி டிவி.

அதுவும் டால்பி ஆடியோ (Dolby audio), டிடிஎஸ்-எக்ஸ் (DTS-X), டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் (DTS Virtual X) உள்ளிட்ட ஆடியோ அம்சங்களை கொண்ட 30W ஸ்பீகர்கள் உடன் சியோமி எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் 4கே டிவி அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இந்த ஸ்மார்ட்போன் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

தீபாவளி ஆஃபர்.. ரூ.16,999 பட்ஜெட்ல 50-இன்ச் சியோமி டிவி.. எந்த மாடல்?

மேலும் MI வாய்ஸ் கண்ட்ரோல் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சியோமி டிவி. நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், யூடியூப், சோனி லிவ் உள்ளிட்ட பல்வேறு ஒடிடி ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். எச்டிஆர் 10, HLG போன்ற ஆதரவுகளும் இந்த டிவியில் உள்ளன.

அதேபோல் வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0,எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், இயர்போன், ஈதர்நெட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சியோமி எக்ஸ் சீரிஸ் 50 இன்ச் 4கே டிவி.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Mi X Series 50 inch 4K TV gets 62 percent discount in Flipkart big festive dhamaka sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X