Home
Gadgets

விலை ரூ.11,700: 43-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! சியோமி மீண்டும் அதிரடி.!

சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது, குறிப்பாக பட்ஜெட் விலையில் தரமான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவிகள் வெளிவருவதால் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் மற்ற நிறுவனங்களை விட அதிகளவு டிவி மாடல்களை விற்பனை செய்துள்ளது சியோமி நிறுவனம்.

 புதிய மி டிவி

இந்நிலையில் சியோமி நிறுவனம் புதிய மி டிவி இ43கே (Mi TV E43K) ஸ்மார்ட் டிவி மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் விலை CNY 1,099 (இந்திய மதிப்பில் ரூ.11,700)-ஆக உள்ளது. பின்பு விரைவில் இந்த புதிய ஸ்மார்ட் டிவி அனைத்து நாடுகளுக்கும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள மி டிவி இ43கே (Mi TV E43K) ஸ்மார்ட் டிவி ஆனது 43-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1920x1080 பிக்சல் திர்மானம் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் விகிதம் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.

பீக்கர்களை

குறிப்பாக சியோமி நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட் டிவி 178 டிகிரி கோணத்துடன் வருகிறது. ஆடியோவைப் பொறுத்தவரை, டி.வி.எஸ் 2.0 உடன் இரண்டு 8W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் அருமையாக இருக்கும்.

சியோமி மி டிவி இ43கே ஆனது ஆண்ட்ராய்டு டிவியை அடிப்படையாக கொண்ட பேட்ச்வால் கொண்டு இயங்குகிறது, எனவே
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இது கன்டெட் உடன் லோட் செய்யப்பட்ட intuitive interface-ஐசேர்க்கிறது

ஸ்டாண்டர்ட் இன்ப்ராரெட்

ஆனால் இந்த புதிய ஸ்மார்ட் டிவியில் ப்ளூடூத் இணைப்பு இல்லை என சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது, எனவேபுதிய மாடல் ப்ளூடூத் ரிமோட்டிற்கு பதிலாக ஸ்டாண்டர்ட் இன்ப்ராரெட் (அகச்சிவப்பு) ரிமோட் கண்ட்ரோலைப் பயன்படுத்துகிறது.

இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி

சியோமி மி டிவி இ43கே ஸ்மார்ட் டிவியின் மென்பொருள் அமைப்பை பற்றி பேசுகையில், டூயல் கோர் ப்ராசஸர் மூலம் 1.4ஜிகாஹெர்ட்ஸ் க்ளாக் ஸ்பீட் மற்றும் மாலி -450 எம்பி 2 ஜி.பீ.யு உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் 1ஜிபி ரேம்
மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.

போர்ட்கள், ஏ.வி போர்ட். ஈதர்நெட்

மேலும் வைஃபை, இரண்டு எச்டிஎம், போர்ட்கள், இரண்டு யூஎஸ்பி போர்ட்கள், ஏ.வி போர்ட். ஈதர்நெட் போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது சியோமி மி டிவி இ43கே ஸ்மார்ட் டிவி மாடல்.

ட்ச்வால் 3.0 ஆனது மி டிவி

அன்மையில் சியோமி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ருஐ உடனான பேட்ச்வால் 3.0 ஐ இந்தியாவில் உள்ள மி டிவிகளுக்கு வெளியிடத் தொடங்கியது. அதன்படி இந்த புதிய பேட்ச்வால் 3.0 ஆனது மி டிவி 4 ஏ, மி டிவி 4 சி ப்ரோ, மி டிவி 4 ஏ ப்ரோ, மி டிவி 4 ப்ரோ, மி டிவி 4 எக்ஸ், மற்றும் மி டிவி 4 எக்ஸ் ப்ரோ உள்ளிட்ட சாதனங்களுக்கு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Mi TV with 43-inch Full-HD Screen launched and More Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X