ஆகஸ்ட் 5: இந்தியாவில் அறிமுகமாகும் சியோமி மி டிவி ஸ்டிக்.!

|

சியோமி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் சாதனங்கள் உலகளவில் நல்ல வரவேற்பை பெறுகிறது. இந்தியாவிலும் ஸ்மார்ட்போன், டிவி உட்பட பல்வேறு பொருட்களை விற்பனை செய்துவருகிறது இந்நிறுவனம்.

 ஆகஸ்ட 5-ம் தேதி தனது

சியோமி நிறுவனம் வரும் ஆகஸ்ட 5-ம் தேதி தனது புதிய சியோமி மி டிவி ஸ்டிக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, இந்த சாதனம் ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 4கே ஸ்ட்ரீமிங் சாதனத்தை

இந்நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு தனது மி பாக்ஸ் 4கே ஸ்ட்ரீமிங் சாதனத்தை அறிமுகம் செய்த நிலையில்,தற்சமயம்மி டிவி ஸ்டிக் எனப்படும் மிகச் சிறிய வீடியோ ஸ்ட்ரீமிங் தயாரிப்பை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

Call Of Duty Mobile கேம் எந்த நாட்டை சேர்ந்தது? இதுவும் சீன நிறுவனமா? உண்மை என்ன?Call Of Duty Mobile கேம் எந்த நாட்டை சேர்ந்தது? இதுவும் சீன நிறுவனமா? உண்மை என்ன?

ஃபயர் டிவி ஸ்டிக்கிற்கு

விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் மி டிவி ஸ்டிக் ஆனது கட்டைவிரல் அளவுடன் சிறந்த திறன்களை கொண்டுள்ளது, குறிப்பாக அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக்கிற்கு போட்டியாக இந்த சாதனம் வெளிவரும் என்றே கூறலாம்.

IRCTC - SBI Rupay கார்டு அறிமுகம்.! என்ன பலன்? என்னென்ன சிறப்பம்சங்கள்.!IRCTC - SBI Rupay கார்டு அறிமுகம்.! என்ன பலன்? என்னென்ன சிறப்பம்சங்கள்.!

 நடைபெற்ற EcoSystem 2020 தயாரிப்பு

அன்மையில் நடைபெற்ற EcoSystem 2020 தயாரிப்பு வெளியீட்டு நிகழ்வின்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ரெட்மி 9 சீரிஸ், TWS இயர்பட்ஸ், Mi ஸ்மார்ட் பேண்ட் 5 மற்றும் 34 இன்ச் 144 ஹெர்ட்ஸ் கேமிங் டிஸ்ப்ளே உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

Chromecast ஆதரவைக் கொண்டு

குறிப்பாக மி டிவி ஸ்டிக் சாதனம் ஆனது டால்பி மற்றும் DTS உடன் இயங்கும் சரவுண்ட் சவுண்ட் ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு உள்ளடக்க தேடலை எளிதாக்குவதற்கு கூகுள் அசிஸ்டென்டைக் கொண்டுள்ளது. பின்பு Chromecast ஆதரவைக் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கிறது, பின்பு ஸ்ட்ரீமிங்

இந்த மி டிவி ஸ்டிக் சாதனம் குவாட்-கோர் சிபயு மூலம் இயக்கப்படுகிறது, பின்பு ஸ்ட்ரீமிங் ஸ்டிக்கில் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு ப்ளூடூத் ரிமோட் கன்ட்ரோலருடன் வருகிறது இந்த சாதனம், இது மி பாக்ஸ் 4கே உடன் வரும் ரிமோட் கண்ட்ரோல் போன்றது. குறிப்பாக கூகுள் அசிஸ்டன்ட், நெட்ஃபிலிக்ஸ் மற்றும் பிரைம் விடியோவிற்கான பிரத்யேக பட்டன்களை கொண்டுள்ளது. இது 600fps இல் FHD தெளிவுத்திறன் வீடியோக்களையும் ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 சாதனத்தின் விலை 39.99 யூரோக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மி டிவி ஸ்டிக் சாதனத்தின் விலை 39.99 யூரோக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்திய விலை மதிப்பில் ரூ.3,400-க்கு இந்த சாதனம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் ஸ்ட்ரீமிங் வீடியோ ஸ்டிக் நிறுவனத்தின் முதல் முயற்ச ஆகும். ஆனால மி பாக்ஸ் 4கே மிகவு சக்தி வாய்ந்தது, ஏனெனில் 4கே வீடியோக்களையும் எச்டிஆர் 10 ஆதரவு மற்றும் பலவற்றையும் ஆதரிக்க முடியும். குறிப்பாக மி ஸ்டிக்கை போலவே இது உள்ளமைக்கப்பட்ட Chromecast மற்றும் கூகிள் அசிஸ்டன்ட்டையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi TV Stick India Launch Date is August 5 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X