சியோமி நிறுவனத்தின் மாஸ்டர் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! வியக்கவைக்கும் விலை.!

|

சியோமி நிறுவனம் உலகம் முழுவதும் பல்வேறு அதிநவீன ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து ஸ்மார்ட் டிவி மாடல்கள்களுக்கும் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

மி டிவி மாஸ்ட்ர் 65-இன்ச் ஒஎல்இடி டிவி

மி டிவி மாஸ்ட்ர் 65-இன்ச் ஒஎல்இடி டிவி

தற்சமயம் இந்நிறுவனம் மி டிவி மாஸ்ட்ர் 65-இன்ச் ஒஎல்இடி டிவி(Mi TV Master 65-inch OLED TV)மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, விரைவில் இந்த சாதனம் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின்
விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

self-luminous தொழில்நுட்ப வசதி

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட மி டிவி மாஸ்ட்ர் 65-இன்ச் ஒஎல்இடி டிவி மாடல் ஆனது 3840 x 2160 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது. மேலும் self-luminous தொழில்நுட்ப வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.

சீன மொழியில் பதிவிடப்பட்ட மோடியின் Weibo கணக்கு நீக்கம்! ஏன் தெரியுமா?சீன மொழியில் பதிவிடப்பட்ட மோடியின் Weibo கணக்கு நீக்கம்! ஏன் தெரியுமா?

சியோமி ஸ்மார்ட் டிவி 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் MEMC motion compensation தொழில்நுட்ப

இந்த புதிய சியோமி ஸ்மார்ட் டிவி 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் MEMC motion compensation தொழில்நுட்பவசதியை கொண்டுள்ளது, எனவே இது கேமிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு மிகவும் அருமையாக பயன்படும். பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

1000nits பிரைட்னஸ்

1000nits பிரைட்னஸ்

குறிப்பாக மி டிவி மாஸ்ட்ர் 65-இன்ச் ஒஎல்இடி டிவி ஆனது 1000nits பிரைட்னஸ் வசதியைக் கொண்டுள்ளது, மேலும் இதுபில்லியன் முதன்மை வண்ணங்களைக் காட்டுகிறது. பின்பு இந்த சாதனம் 98.5 சதவீத டிசிஐ-பி 3 வைட்-கலர் வரம்பு, 1000000: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ, எச்டிஆர் 10+ சப்போர்ட் மற்றும் டால்பி விஷன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி

மேலும் இந்த ஸ்மார்ட் டிவியில் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி9650 பிராசஸர் வசதி உடன் மாலி-ஜி52 ஜபியு வசதி இடம்பெற்றுள்ளது,பின்பு 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த 65-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்

ஸ்மார்ட் டிவி மாடல் AI மாஸ்டர்

இந்த புதிய சியோமி ஸ்மார்ட் டிவி மாடல் AI மாஸ்டர் எஞ்சினுடன் வருகிறது, இது பிக்சல்-நிலை டைனமிக் பிக்சர் தர சரிசெய்தலை வழங்குகிறதுஇ மேலும் இது 20-க்கும் மேற்பட்ட பட தர வழிமுறைகள் மற்றும் 5 முக்கிய காட்சி ஒத்திசைவு முறைகளைக் கொண்டுள்ளது.

65-இன்ச் ஒஎல்இடி டிவி

சியோமி மி டிவி மாஸ்ட்ர் 65-இன்ச் ஒஎல்இடி டிவி மாடலின் ஆடியோ பற்றி பேசுகையில்,இவற்றில் W 12.5W இடது மற்றும் வலது சேனல்கள், 2 x 10W சரவுண்ட் சேனல்கள் மற்றும் 20W 50Hz அல்ட்ரா-லோ frequency subwoofer கொண்ட 65W ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் டால்பி அட்மோஸ் உள்ளிட்ட அம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளதால் தியேட்டர்
அனுபவத்தை வழங்கும்.

வைஃபை மற்றும் புளூடூத் 5.0 உள்ளிட்ட பல்வேறு இ

இந்த சாதனத்தில் XiaoAI virtual அசிஸ்டென்ட் உடன் பேட்ச்வால் UI மூலம் இயங்குகிறது. பின்பு மூன்று எச்டிஎம்ஐ போர்ட்,இரண்டு யுஎஸ்பி போர்ட், எஸ் / பி.டி.ஐ.எஃப், ஈதர்நெட் போர்ட், வைஃபை மற்றும் புளூடூத் 5.0 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

சியோமி மி டிவி மாஸ்ட்ர் 65-இன்ச் ஒஎல்இடி டிவி மாடலின் விலை

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட சியோமி மி டிவி மாஸ்ட்ர் 65-இன்ச் ஒஎல்இடி டிவி மாடலின் விலை 12,999 யுவான்(இந்திய மதிப்பில்ரூ.1,38,900-ஆக உள்ளது.)

Best Mobiles in India

English summary
Xiaomi Mi TV Master 65-inch 4K OLED TV Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X