Home
Gadgets

சியோமி நிறுவனத்தின் புத்தம் புதிய 55-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! பட்ஜெட் விலை.!

சியோமி நிறுவனம் இன்று புதிய மி டிவி 4எக்ஸ் 55-இன்ச் 2020 எடிஷன் ஸ்மார்ட் டிவி மாடலை இந்தியாவவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல் ஆனாது வரும் டிசம்பர் 2-ம் தேதி 12மணி அளவில் அமேசான் மற்றும் மி.காம் வலைதளங்களில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 4கே எச்டிஆர் டிஸ்பிளே

4கே எச்டிஆர் டிஸ்பிளே

சியோமி நிறுவனத்தின் மி டிவி 4எக்ஸ் 55-இன்ச் 2020 எடிஷன் ஸ்மார்ட் டிவி மாடல் 4கே எச்டிஆர் டிஸ்பிளே வடிவமைப்பைக்கொண்டுள்ளது, பின்பு சியோமி நிறுவனத்திற்கு சொந்தமான விவிட் பிக்சர் எஞ்சின் (Vivid Picture Engine)கொண்டு இந்த டிவி மாடல் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆடியோ

ஆடியோ

மி டிவி 4எக்ஸ் 55-இன்ச் 2020 எடிஷன் ஆடியோ பொறுத்தவரை 20வாட் டால்பி அட்மாஸ் மற்றும் டிடிஎச் ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது, குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இந்த சாதனத்தின் ஆடியோ பகுதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 பேட்ச்வால் 2.0 யுஐ

பேட்ச்வால் 2.0 யுஐ

சியோமி மி டிவி 4எக்ஸ் 55-இன்ச் 2020 எடிஷன் ஸ்மார்ட் டிவி ஆனாது ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் உடன் பேட்ச்வால் 2.0 யுஐ இல் இயங்குகிறது. பின்பு நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் ஹாட்ஸ்டாருக்கான சொந்த ஆதரவுடன் 4கே உள்ளடக்கத்தின் விரிவான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.

கூகிள் பிளே ஸ்டோர்

கூகிள் பிளே ஸ்டோர்

சியோமி மி டிவி 4எக்ஸ் 55-இன்ச் 2020 எடிஷன் கூகிளின் சமீபத்திய ஆண்ட்ராய்டு டிவி 9.0 உடன் வருகிறது, இது கூகிள்அசிஸ்டென்ட், யூடியூப், குரோம் காஸ்ட், கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் டேட்டா சேவர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவி இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

இந்த ஸ்மார்ட் டிவி இணைப்பு ஆதரவுகள் பொறுத்தவரை வைஃபை, புளூடூத் 4.2, மூன்று எச்.டி.எம்.ஐ போர்ட்கள், இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள் மற்றும் ஈதர்நெட் போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. குறிப்பாக பயனர்களுக்கு சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும் வகையில்இந்த ஸ்மார்ட் டிவி வெளியிடப்பட்டுள்ளது.

சியோமி மி டிவி 4எக்ஸ் 55-இன்ச் 2020 எடிஷன்  விலை

சியோமி மி டிவி 4எக்ஸ் 55-இன்ச் 2020 எடிஷன் விலை

சியோமி மி டிவி 4எக்ஸ் 55-இன்ச் 2020 எடிஷன் ஸ்மார்ட் டிவியின் உண்மை விலை ரூ.34,999-ஆக உள்ளது. பின்பு இந்தசாதனத்தின் விற்பனை வரும் டிசம்பர் 2-ம் தேதி முதல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi TV 4X 55 Inch Edition Smart TV Launched at Rs 34,999 in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X