Home
Gadgets

75-இன்ச் சியோமி மி டிவி 4எஸ் அறிமுகம்: விலையை கேட்டால் ஆடிப்போவீங்க ஆடி.!

டால்பி எச்டி மற்றும் டிடிஎஸ் ஆடியோ ஆதரவுகளை கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிசிஎல் நிறுவனம் அன்மையில் புதிய தொழில்நுட்பம் கொண்ட 65-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்தது, இந்த டிவி மாடல் உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, அதன்படி இந்நிறுவனத்திற்கு போட்டியாக தற்சமயம் சியோமி நிறுவனம் புதிய 75-இன்ச் சியோமி மி டிவி 4எஸ் மாடலை அறிமுகம் சீனாவில் செய்துள்ளது. மேலும் இந்த டிவி மாடல் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

75-இன்ச் சியோமி மி டிவி 4எஸ் அறிமுகம்.!

மேலும் இந்த புதிய 75-இன்ச் சியோமி மி டிவி 4எஸ் மாடல் வரும் நவம்பர் 23-ம் தேதி சியோமி மால் மற்றும் ஆன்லைன் விற்பனை தளங்களில் விற்பனைக்கு வரும் என்று சியோமி நிறுவனம் சார்பில் தெரவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலைப் பார்ப்போம்.

  டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இந்த சியோமி மி டிவி 4எஸ் மாடல் பொதுவாக 75-இன்ச் 4கே யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு எச்டிஆர் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு:

ஆண்ட்ராய்டு:

சியோமி மி டிவி 4எஸ் மாடலில் பொதுவாக 64-பிட் குவாட்-கோர் ஏ-53 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் பேட்ச்வால் யுஐ இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த சாதனத்தில் 2ஜிபி ரேம் மற்றும் 8எம்பி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு நெட்ஃபிக்ஸ், அமேசான் மற்றும் யூடியூப் போன்ற பல்வேறு செயலிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பதிவிறக்கம் செய்து எளிமையாக பயன்படுத்த முடியும்.

டால்பி எச்டி

டால்பி எச்டி

டால்பி எச்டி மற்றும் டிடிஎஸ் ஆடியோ ஆதரவுகளை கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, பின்பு எச்டிஎம்ஐ போர்ட், லேன் போர்ட், ஆடியோஃவீடியோ அவுட், 3.5எம்எம் ஹேட்போன் ஜாக், எஸ்பிடிஐஎப் போர்ட்,யுஎஸ்பி-ஏ போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

 விலை:

விலை:

75-இன்ச் சியோமி மி டிவி 4எஸ் மாடலின் இந்திய விலைப் பொறுத்தவரை ரூ.82,000 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட் டிவியின் விலைப் பொறுத்தவரை சற்று உயர்வாக தான் இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi TV 4S with 75-inch 4K display officially launched for Rs 82,000: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X