பட்ஜெட் விலையில் சியோமி மி டிவி 4சி அறிமுகம்.!
சியோமி மி டிவி 4சி சாதனம் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது.
சியோமி நிறுவனம் தற்சமயம் சியோமி மி டிவி 4சி என்ற ஸ்மார்ட் டிவி மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, மேலும் சீனாவில் வரும் ஏப்ரல் 3-ம் தேதி இந்த ஸ்மார்ட் டிவி மாடல் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்.

இதற்குமுன்பு அறிமுகம் செய்யப்பட்ட சியோமி மி டிவி 4எஸ் மாடலை விட சிறந்த அம்சங்களுடன் மற்றும் குறைந்த விலையில் இந்த சியோமி மி டிவி 4சி மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.

டிஸ்பிளே:
இந்த சியோமி மி டிவி 4சி என்ற ஸ்மார்ட் டிவி மாடல் 50-இன்ச் 4கே டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 3840x2160
பிக்சல் தீர்மானம் மற்றும் 178 டிகிரி கோணங்களை ஆதரிக்கும் வசதி கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்.

பேட்ச்வால் ஒஎஸ்:
சியோமி மி டிவி 4சி சாதனம் பொதுவாக ஆண்ட்ராய்டு இயங்குதளம் சார்ந்து பேட்ச்வால் ஒஎஸ் கொண்டுள்ளது. பேட்ச்வால் ஆனது
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் டீப் லெர்னிங் வழிமுறை கொண்டு இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவாட்-கோர்:
இந்த சாதனம்1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஏம்லாஜிக் -ஏ53 சிப்செட் அமைப்பு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு 750மெகாஹெர்ட்ஸ் மாலி-450 ஜிபியு இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு:
சியோமி மி டிவி 4சி சாதனம் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது. அதன்பின்பு 8-வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
மற்றும் டிடிஎஸ்இ டிடிஎஸ் எச்டிஇ டால்பி ஆடியோ போன்ற அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ப்ளூடூத் 4.2, ஈத்தர்நெட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த
அட்காசமான சியோமி மி டிவி 4எஸ். மேலும் வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.

விலை:
சியோமி மி டிவி 4சி சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.22,700-ஆக உள்ளது. மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.


Click it and Unblock the Notifications