வியக்கவைக்கும் விலையில் 58-இன்ச் சியோமி மி டிவி 4ஏ அறிமுகம்.!

இந்த சாதனம் ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் பேட்ச்வால் யுஐ ஆதரவு செயல்படும், குறிப்பாக குரல் தேடலுக்கான ஆதரவுடன் ஒரு ப்ளூடூத் ரிமோட் மூலம் இயங்குகிறது.

|

சியோமி நிறுவனம் தொடந்து இந்திய சந்தையில் புதிய சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அந்த வகையில் இன்று ரூ.30,000-விலையில் அசத்தலான 58-இன்ச் சியோமி மி டிவி 4ஏ ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம்.

தீபாவளிக்கு எம்ஐயின் சிறப்பு தள்ளுபடியும், அசரவைக்கும் இ-வாலெட்களின் தள்ளுபடியும்.!தீபாவளிக்கு எம்ஐயின் சிறப்பு தள்ளுபடியும், அசரவைக்கும் இ-வாலெட்களின் தள்ளுபடியும்.!

குறிப்பாக இந்த டிவி மாடல் 4கே எச்டிஆர் (4K HDR) தொழில்நுட்ப அடிப்படையில் வெளிவந்துள்ளது, எனவே சிறந்த திரை அனுபவம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப்

பார்ப்போம்.

 டிஸ்பிளே மற்றும் பிக்சல்:

டிஸ்பிளே மற்றும் பிக்சல்:

58-இன்ச் ஐபிஎஸ் எல்இடி டிஸ்பிளே கொண்ட சியோமி மி டிவி 4ஏ மாடல் பொறுத்தவரை 4கே எச்டிஆர் (4K HDR) தொழில்நுட்ப அடிப்படையில் வெளிவந்துள்ளது,பின்பு 3840 x 2160 பிக்சல் திர்மானம் மற்றும் 60Hz மற்றும் 178 டிகிரி பார்வை அனுபவத்துடன் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது.

ஆடியோ:

ஆடியோ:

சியோமி மி டிவி 4ஏ ஸ்மார்ட் டிவி பொறுத்தவரை டால்பி ஆடியோ மற்றும் டி.டி.எஸ்-எச்டி ஒலியை ஆதரிக்கிறது, பின்பு இதற்குமுன்பு வந்த சியோமி டிவி ப்ரோ மாடல்களை விட சிறந்த வடிவமைப்பு மற்றும் சிறந்த தொழில்நுட்ப அடிப்படையில்
இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

செயலி:

செயலி:

AMlogic T962 64-பிட் குவாட்-கோர் 1.5ஜிகாஹெர்ட்ஸ் செயலியைக் கொண்டுள்ளது சியோமி மி டிவி 4ஏ ஸ்மார்ட் டிவி சாதனம். பின்பு 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

இயங்குதளம்:

இயங்குதளம்:

இந்த சாதனம் ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் பேட்ச்வால் யுஐ ஆதரவு செயல்படும், குறிப்பாக குரல் தேடலுக்கான ஆதரவுடன் ஒரு ப்ளூடூத் ரிமோட் மூலம் இயங்குகிறது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம்
செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

சியோமி மி டிவி 4ஏ ஸ்மார்ட் டிவி மாடல் 3எச்டிஎம் போர்ட், 2யுஎஸ்பி-ஏ போர்ட், ஏவி போர்ட், வைஃபை, ப்ளூடூத் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi TV 4A with 58-inch 4K HDR display officially launched for Rs 30,000: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X