சியோமியின் 32-இன்ச், 43-இன்ச் Horizon Edition ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.! பட்ஜெட் விலை.!
சியோமி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் ஸ்மார்ட் டிவிகள் அனைத்து இந்திய சந்தையில் அதிக வரவேற்பை பெறுகிறது. இந்நிலையில் மி டிவி 4ஏ Horizon Edition ஸ்மார்ட் டிவிகளை தற்போது அறிமுகம் செய்துள்ளது சியோமி நிறுவனம்.

சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள மி டிவி 4 ஏ ஹாரிசன் எடிஷன் ஆனது இரண்டு அளவுகளில் வருகிறது, 32-இன்ச் மற்றும் 43-இன்ச் மாடல்கள். இவற்றின் விலை முறையே ரூ.13,499 மற்றும் ரூ.22,999-என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி மி டிவி 4ஏ ஹாரிசன் எடிஷன் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது பெசல்-லெஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, பின்பு 1368 x 768 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் மி டிவி 4ஏ ஹாரிசன் எடிஷன் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது ஃபுல் எச்டி பெசல்-லெஸ் டிஸ்பிளே வடிவமைப்பு மற்றும் 1920 x 1080 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது.

இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகளுமே 95% ஸ்க்ரீன் டூ பாடி விகிதம் மற்றும் 178 டிகிரி கோணத்துடன் வருகின்றன. மேலும் மி டிவி ஹாரிசன் எடிஷன் தொடர் ஸ்மார்ட் டிவிககள் ஆனது துல்லியமான ஸ்க்ரீன் கேலிப்ரேஷன், ஆழமான கான்ட்ராஸ்ட்டுகள் மற்றும் கலர் ரீப்ரொடெக்ஷனில் பின்பாயிண்ட் துல்லியம் போன்ற வசதிகளுடன் வெளிவந்துள்ளது எனவே பயன்படுத்துவதற்கு மிகவும்அருமையாக இருக்கும்.

மேலும் Mi-இன் தனியுரிம விவிட் பிக்சர் என்ஜின் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது Horizon Edition ஸ்மார்ட் டிவி மாடல்கள். பின்பு இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் ஆனது ஆண்ட்ராய்டு டிவி 9 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் சொந்த ஸ்கின் ஆன பேட்ச்வால் UI கொண்டு இயங்குகிறது. இதன் பேட்ச்வால் ஆனது நெட்பிலிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் போன்ற 23+ ஓடிடி கன்டென்ட் கூட்டாளர்களை ஒருங்கிணைத்து, மொத்தம் 16+ மொழிகளில் இருந்து கன்டென்ட்டை கொண்டு வருகிறது என்பது குறிப்பிடதத்க்கது.

இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் கூகுள் அசிஸ்டென்ட், கூகுள் டேட்டா சேவர் தொழில்நுட்பம், க்ரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு
வசதிகளை கொண்டுள்ளது. இந்த புதிய சியோமி டிவிகளில் குவிக் வேக் அம்சமும் இடம்பெற்றுள்ளது, எனவே வெறும் 05 வினாடிகளில் உங்கள் டிவியை வேக் அப் செய்ய வைக்க முடியும்.

மி டிவி 4 ஏ ஹாரிசன் எடிஷன் ஸ்மார்ட் டிவிகள் ஆனது ஒன்-க்ளிக் ப்ளே அம்சத்துடன் வருகிறது, இது பயனர்கள் ஒரே கிளிக்கில் லைவ் கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்க அனுமதிக்கிறது. பின்பு பேட்ச்வாலில் இருந்து நேரடியாக ஒருங்கிணைக்கப்பட்ட 7க்கும் அதிகமானலைவ் செய்தி சேனல்களிலிருந்தும் நீங்கள் செய்திகளைக் காணலாம் என்பது சிறப்பு.

இந்த புதிய சியோமி ஸ்மார்ட் டிவிகள் கோர்டெக்ஸ்-ஏ 53 ப்ராசஸர் மூலம் 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இயக்கப்படுகிறது. பின்பு டி.வி.எஸ் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் 20வாட் ஸ்பீக்கர்களும் இவற்றுள் உள்ளன.

மேலும் எச்டிஎம்ஐ போர்ட்கள்,இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள், ஒரு ஈதர்நெட் போர்ட், 3.5 மிமீ ஹெட்ஜாக், ப்ளூடூத் 4.2 மற்றும் வைஃபை 802.11 பி / ஜி / என் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளன மி டிவி 4 ஏ ஹாரிசன் எடிஷன் ஸ்மார்ட் டிவிகள.;

சியோமி மி டிவி 4ஏ ஹாரிசன் எடிஷன் தொடரின் கீழ் அறிமுகமான 32 இன்ச் மாடல் வரும் செப்டம்பர் 11-ம் தேதி பிளிப்கார்ட் மற்றும் மி.காம் வலைதளங்களில் 12மணிக்கு விற்பனைக்கு வரும். பின்பு 43-இன்ச மாடலானது செப்டம்பர் 15-ம் தேதி மாலை 6-மணிக்கு விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications