"சியோமி மி டிவி 4ஏ" ஸ்மார்ட் டிவி ரூ.13,999 சிறப்பு விற்பனை.!
சியோமி மி டிவி 4ஏ ஸ்மார்ட் டிவி இன் 32 இன்ச் மற்றும் 43 இன்ச் டிவிகளின் விற்பனையை இன்று முதல் துவங்குகிறது.
சியோமி நிறுவனம் தன் வாடிக்கையாளருக்கு என்ன தேவை என்பதை நன்கு உணர்ந்து, அடிக்கடி அதன் தயாரிப்பு மற்றும் அதன் விற்பனையில் பல மாற்றங்கள் மற்றும் பல சலுகைகளை வழங்கி வருகிறது. அப்படி இன்றும் சியோமி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய விற்பனை தொடக்கத்தை அறிமுகம் செய்துள்ளது.

சியோமி நிறுவனத்தின் சியோமி மி டிவி 4ஏ இப்பொழுது பிளிப்கார்ட் மற்றும் மி ஸ்டோர் mi.com வலைத்தளத்தில் கிடைக்குமென்று அறிவித்துள்ளது. இதற்கு முன்பு மி ஸ்டோர் இல் ஃபிளாஷ் விற்பனை மட்டுமே செய்துவந்த சியோமி தற்பொழுது திறப்பு விற்பனையைத் தொடங்கியுள்ளது.

சியோமி மி டிவி 4ஏ
சியோமி மி டிவி 4ஏ ஸ்மார்ட் டிவி இன் 32 இன்ச் மற்றும் 43 இன்ச் டிவிகளின் விற்பனையை இன்று முதல் துவங்குகிறது. இனிமேல் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து காத்திருந்து சியோமி மி டிவி 4ஏ ஐ வாங்க வேண்டியதில்லை. நேரடியாக பிளிப்கார்ட் மற்றும் சியோமி வலைத்தளத்திற்குச் சென்றே சியோமி மி டிவி 4ஏ-வை வாங்கிக்கொள்ளம்.

விற்பனை சலுகைகள்
இத்துடன் பிளிப்கார்ட் நிறுவனம் சில விற்பனை சலுகைகளை வழங்கியுள்ளது, ரூ.6000 க்கு எஸ்ச்செஞ் சலுகை, வட்டி இல்லா மாத தவணை திட்டம் மற்றும் இலவச இன்ஸ்டாலேஷன் செய்து தரப்படுமென்று அறிவித்துள்ளது.

சியோமி மி டிவி 4ஏ சிறப்பம்சங்கள்:
- முழு எச்டி எல்இடி திரை
- 64 பிட் க்வாட் கோர் அமலாஜிக் T962 ப்ராசசர்
- 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள் சேமிப்பு
- 3 யுஎஸ்பி 2.0 போர்ட்
- 3 எச்டிஎம்ஐ போர்ட்
- 1 ஈதர்நெட் போர்ட்
- 1 இயர்போன் போர்ட்
- 10 வாட்ஸ் இரண்டு ஸ்பீக்கர்
- வைஃபை 802.11
- ப்ளூடூத் 4.2

ஸ்மார்ட் ரிமோட்
சியோமி மி டிவி 4ஏ 32 இன்ச் இன் விலை ரூ.13,999 மற்றும் சியோமி மி டிவி 4ஏ 43 இன்ச் ரூ.22,999 என்ற விற்பனை விலையில் கிடைக்கிறது. இந்த டிவி 11 பட்டன் கொண்ட ஸ்மார்ட் ரிமோட்டுடன் வருகிறது.


Click it and Unblock the Notifications