Home
Gadgets

மலிவான விலையில் 70' இன்ச் சியோமி மி டிவி 4ஏ ஸ்மார்ட் டிவி அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

சியோமி நிறுவனம் தனது ஸ்மார்ட் டிவி பட்டியலில், புதிதாக சியோமி மி டிவி 4ஏ (Xiaomi Mi TV 4A) என்ற 70' இன்ச் டிஸ்பிளே வேரியண்ட் ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் டிவி பற்றிய முழு விபரம் மற்றும் விலை விபரங்களைக் இங்கே காணலாம்.

புதிய சியோமி மி டிவி 4ஏ 70' இன்ச் ஸ்மார்ட் டிவி

புதிய சியோமி மி டிவி 4ஏ 70' இன்ச் ஸ்மார்ட் டிவி

இந்த புதிய சியோமி மி டிவி 4ஏ 70' இன்ச் ஸ்மார்ட் டிவி, 4K எச்டிஆர் எல்சிடி டிஸ்ப்ளேயுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இதன் டிஸ்பிளே 60 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷிங் விகிதத்தில் செயல்படும் படி உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட் டிவி அம்சங்கள்

புதிய ஸ்மார்ட் டிவி அம்சங்கள்

புதிய சியோமி மி டிவி 4ஏ 70' இன்ச் ஸ்மார்ட் டிவியில், உயர்-தெளிவுத்திறன் காட்சி சேவை உட்பட, பல புதிய ஸ்மார்ட் டிவி அம்சங்களையும் சியோமி நிறுவனம் இந்த ஸ்மார்ட் டிவியுடன் சேர்த்துள்ளது. இம்முறை சியோமி நிறுவனம் பல ஸ்மார்ட் இணைப்பு போர்ட்களுடன், டிஜிட்டல் அசிஸ்டன்ட் சேவையையும் இந்த டிவியில் வழங்கியுள்ளது.

சியோமி மி டிவி 4ஏ ஸ்டோரேஜ் விபரம்

சியோமி மி டிவி 4ஏ ஸ்டோரேஜ் விபரம்

அல்ட்ரா ஸ்லிம் கொண்ட நாரோ பெஸ்ஸில் டிசைனுடன் கூடிய அமலாஜிக் பிராசஸருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சியோமி மி டிவி 4ஏ 70' இன்ச் ஸ்மார்ட் டிவியில் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.

வாய்ஸ் அசிஸ்டன்ட் சேவை

வாய்ஸ் அசிஸ்டன்ட் சேவை

புதிய சியோமி மி டிவி 4ஏ ஸ்மார்ட் டிவி 'பேட்ச் வால் ஓஎஸ்(PatchWall OS)' இயங்குதளத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே இயங்குதளம் Mi TV 4A Pro ஸ்மார்ட் டிவியிலும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிவியில் XiaoAI என்ற வாய்ஸ் அசிஸ்டன்ட் சேவையையும் சியோமி வழங்கியுள்ளது.

சியோமி மி டிவி 4ஏ போர்ட்கள்

சியோமி மி டிவி 4ஏ போர்ட்கள்

  • இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள்
  • ஒரு ஏ.வி (ஆடியோ / வீடியோ) உள்ளீடு
  • ஒரு எஸ் / பி.டி.ஐ.எஃப் போர்ட்
  • மூன்று எச்.டி.எம்.ஐ போர்ட்கள்
  • வைஃபை
  • ப்ளூடூத்
  • ஸ்கிரீன் மிரரிங்
  • விலை விபரம்

    விலை விபரம்

    இதனுடன் இரண்டு உயர் தெளிவுத்திறன் கொண்ட ஆடியோ வெளியீட்டிற்கான டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ்-எச்டி 8W ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி இந்தியச் சந்தையில் ரூ.40,022 என்ற விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi TV 4A 70-inch Specifications And Features Launched : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X