Home
Gadgets

விரைவில்: 50-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை பட்ஜெட் விலையில் களமிறக்கும் சியோமி.!

இந்த சியோமி 50-இன்ச் மாடலின் சேமிப்பு பொறுத்தவரை 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது.

சியோமி நிறுவனம் அறிமுகம் செய்த 55-இன்ச் மி எல்இடி டிவி 4எக்ஸ் ப்ரோ மற்றும் 43-இன்ச் மி எல்இடி டிவி 4ஏ ப்ரோ மாடல்கள் அனைத்து இடங்களிலும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள்
அதிகளவு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

50-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை பட்ஜெட் விலையில் களமிறக்கும் சியோமி.!

இந்நிலையில் வரும் வாரங்களில் புதிய 50-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது சியோமி நிறுவனம். மேலும் இந்த 50-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4கே டிஸ்பிளே

4கே டிஸ்பிளே

புதிய சியோமி 50-இன்ச் மாடல் 4கே டிஸ்பிளே ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது, பின்பு 3840 x 2160 பிக்சல் திர்மானம் மற்றும் 178 டிகிரி வைட்-ஆங்கிள் காட்சி மற்றும் 5000: 1 கான்ட்ராஸ்ட்ரா விகிதம் இவற்றுள்
இடம்பெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குவாட்-கோர்

குவாட்-கோர்

விரைவில் அறிமுகமாகும் புதிய சியோமி டிவி 64-பிட் Amlogic குவாட்-கோர் பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இயக்கத்திற்கு
மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.

சேமிப்பு

சேமிப்பு

இந்த சியோமி 50-இன்ச் மாடலின் சேமிப்பு பொறுத்தவரை 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது. பின்பு சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்
வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடியோ

ஆடியோ

சியோமி 50-இன்ச் ஸ்மார்ட் டிவி பொதுவாக 8வாட் ஸ்பீக்கர் மற்றும் DOLBY ஆடியோ / டிடிஎஸ்- HD ஆடியோ இரட்டை டிகோடிங் ஆதரவு கொண்டுள்ளது. குறிப்பாக சிறந்த திரை அனுபவம் கொடுக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவரும்.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

இந்த ஸ்மார்ட் டிவி வைஃபை, ப்ளூடூத் 4.2இ மி போர்ட், 3எச்டிஎம்ஐ போர்ட், 2யுஎஸ்பி போர்ட், ஈத்தர்நெட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக எச்டிஆர் ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi TV 4A 50-inch to launch in India soon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X