பட்ஜெட் விலையில் சியோமி மி டிவி 4ஏ யூத் எடிஷன் அறிமுகம்.!
சியோமி மி டிவி 4ஏ யூத் எடிஷன் சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரு.17,800-ஆக உள்ளது, தற்சமயம் இந்த ஸ்மார்ட் டிவி சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சியோமி மி டிவி 4ஏ யூத் எடிஷன் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது சியோமி நிறுவனம், மேலும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் அதிநவீன தொழில்நட்பத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு வந்த சியோமி மி டிவி 4 மாடல்கள் அனைத்தும் இந்திய சந்தையில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி மி டிவி 4ஏ யூத் எடிஷன் சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரு.17,800-ஆக உள்ளது, தற்சமயம் இந்த ஸ்மார்ட் டிவி சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, கூடிய விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி மி டிவி 4ஏ யூத் எடிஷன் பொதுவாக 43-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1920x1080 பிக்சல்
திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.
புதிய சியோமி மி டிவி 4ஏ யூத் எடிஷன்-ல் பொதுவாக 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஏம்லாஜிக் கார்டெக்ஸ் ஏ53 எஸ்ஒசி அமைப்பு இடம்பெற்றுள்ளது. மேலும் 750 மெகாஹெர்ட்ஸ் மாலி-டி450 ஜிபியு செயலிஇவற்றுள் அடக்கம்.
குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு இந்த யூத் எடிஷன் ஸ்மார்ட் டிவியின் எடைப் பொறுத்தவரை 7.44 கிலோ என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி 2.0, ஈத்தர்நெட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் மற்றும் 1ஜிபி ரேம் கொண்டுள்ளது சியோமி மி டிவி 4ஏ யூத்
எடிஷன். மேலும் 6வாட் ஸ்பீக்கர், டால்பி விர்ச்சுவல் சரவுண்ட் சவுண்ட், DTS மற்றும் பாஸ் பூஸ்ட்வசதிகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

இந்த சியோமி மி டிவி 4ஏ ஸ்மார்ட் டிவியில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் சார்ந்த பேட்ச்வால் யூசர் இன்டர்ஃபேஸ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. ஆன்லைன் தரவுகள் மற்றும் செட்-டாப் பாக்ஸ் போன்றவற்றை ஒற்றை தளத்தில் வழங்கும் வேலையை பேட்ச்வால் வேலை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications