இந்தியா: சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!
சியோமி மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4ஏ சாதனத்திற்கு ரூ.1500-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.12,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்திய சந்தையில் சியோமி ஸ்மார்ட் டிவிகள் தான் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது, பின்பு இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி விலைகள் அடிக்கடி மாற்றப்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் மாதம் இந்த ஸ்மார்ட் டிவிகளின் விலை சற்று உயர்ந்தது, தற்சமயம் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் எல்ஜி மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு போட்டியாக அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்ட ஸ்மார்ட் டிவிகளை விற்பனைக்கு கொண்டுவருகிறது சியோமி நிறுவனம். குறிப்பாக இந்த புதிய வருடம் முதல் நாளில் சியோமி தனது ஸ்மார்ட்
டிவிகளின் விலை குறைத்துள்ளது, அவற்றின் பட்டியலைப் பார்ப்போம்.

விலைகுறைப்பு:
சியோமி மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4ஏ சாதனத்திற்கு ரூ.1500-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.12,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சியோமி மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4சி சாதனத்திற்கு ரூ.2000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.13,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சியோமி மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4ஏ 49-இன்ச் சாதனத்திற்கு ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.30,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சரக்கு மற்றும் சேவை வரி
மேலும் இந்தியாவில் மின்சாதன பொருட்களுக்காக சரக்கு மற்றும் சேவை வரியை 28சதவிகிதத்தில் இருந்து 18சதவிகிதம் ஆக தற்சமயம் குறைக்கப்பட்டுள்ளதால்.ஸ்மார்ட் டிவி மாடல்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் டிவி மாடல்கள்:
விரைவில் சாம்சங். எல்ஜி. டிசிஎல் போன்ற பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவி மாடல்களின் விலையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும் பண்டிகை காலக்கட்டத்தில் ஸ்மார்ட் டிவி மாடல்களின் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்ச்வால் யுஐ
சியோமி டிவி மாடல்கள், புதிய பேட்ச்வால் யுஐ தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் மற்றும் க்ரோம்காஸ்ட் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் 3300 செயலிகளை இந்த புதிய சியோமி டிவி மாடல்களில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் சியோமி டிவி மாடல்கள்.


Click it and Unblock the Notifications