Home
Gadgets

இந்தியா: பட்ஜெட் விலையில் வெளிவரும் சியோமி ஸ்மார்ட் டிவி.!

வைபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி 2.0, ஈத்தர்நெட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

By Prakash S

சியோமி நிறுவனம் இப்போது பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திவருகிறது, அதன்படி சியோமி நிறுவனத்தின் புதிய மி டிவி மாடல்களை விரைவில் வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்மார்ட்போன் விற்பனையில் இந்தியாவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது சியோமி நிறுவனம். இப்போது பட்ஜெட் விலையில் வெளிவரும் ஸ்மார்ட் டிவி மாடல்கள் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்தியா: பட்ஜெட் விலையில் வெளிவரும் சியோமி ஸ்மார்ட் டிவி.!

சியோமி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளம் மூலம் வந்த தகவலின் அடிப்படையில் 32-இன்ச் மி டிவி 4ஏ மாடலின் விலை ரூ.12,990 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் மற்றோரு டிவி மாடலின் பெயர் இடம்பெறவில்லை என்றாலும் இதன் விலை ரூ.21,999-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது சியோமி டிவி மாடல் 43-இன்ச் திரை மற்றும் மி டிவி 4ஏ என்று அழைக்கப்படலாம். அதன்பின்பு இவற்றில் உள்ள சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 சியோமி மி டிவி 4ஏ:

சியோமி மி டிவி 4ஏ:

சியோமி மி டிவி 4ஏ மாடல்கள் பொறுத்தவரை 32-இன்ச் 1366x768 பிக்சல் எச்டி டிஸ்பிளே மற்றும் 43-இன்ச் 1920x1080 பிக்சல் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவாட்கோர்:

குவாட்கோர்:

சியோமி மி டிவி 4ஏ டிவி மாடல்கள் 1.5ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் 962-எஸ்எக்ஸ் கார்டெக்ஸ்-ஏ53 பிராசஸர் - மாலி-450 எம்பி3 ஜிபியு செயலிகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு:

சேமிப்பு:

32-இன்ச் மற்றும் 43-இன்ச் கொண்ட சியோமி மி டிவி 4ஏ டிவி மாடல்கள் 1ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு பல்வேறு செயல்திறன்களை கொண்டுள்ளது சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்கள்.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி 2.0, ஈத்தர்நெட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் 2 x 5 வாட் ஸ்பீக்கர், டால்பி விர்ச்சுவல் சரவுண்ட் சவுண்ட், DTS மற்றும் பாஸ் பூஸ்ட்வசதிகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
பேட்ச்வால்:

பேட்ச்வால்:

MIUI டிவி சார்ந்த ஆண்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால் அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பித்தக்கது. மேலும் பல்வேறு
சிறப்பம்சங்களை கொண்டுள்ளன சியோமி ஸ்மார்ட் டிவி.

 ஸ்மார்ட் டிவி:

ஸ்மார்ட் டிவி:

சியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை இம்மாத இறுதியில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi TV 4A 32 inch model price leaked could start at Rs 12999 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X