சோனி நிறுவனத்திற்கு போட்டியாக சியோமி 75-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!
சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள மி டிவி 4 சாதனத்தில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்து எல்ஜி, சாம்சங், டிசிஎல் போன்ற பல்வேறு நிறுவனங்கள் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. மேலும் சில நாட்களுக்கு முன்பு சோனி நிறுவனம் சற்று அதிகமான விலையில் 85-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்தது.

இந்நிலையில் சோனி நிறுவனத்திற்கு நேரடி போட்டியாக 75-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது சியோமி நிறுவனம். மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சில தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.

சியோமி மி டிவி 4:
தற்சமயம் சியோமி நிறுவனம் மி டிவி 4 என்ற பெயரில் 75-இன்ச் 4கே எச்டிஆர்; அல்ட்ரா எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் ஸ்மார்ட்
டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இதனுடன் Mi VR Standalone ஹெட்செட் மாடலை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குவாட்-கோர்:
இந்த 75-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் பொதுவாக 64-பிட் ஏ53 குவாட்-கோர் செயலியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.

சேமிப்பு:
சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள மி டிவி 4 சாதனத்தில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஏஐ வாய்ஸ் அசிஸ்டென்ஸ் தொழில்நுட்பம் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது.

ஆடியோ:
இந்த ஸ்மார்ட் டிவியின் மிகமுக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் டால்பி டிஜிட்டல் மற்றும் டிடிஎஸ் சரவுண்ட் ஆடியோ வசதி கொண்டுள்ளது. மேலும் ப்ளூடூத், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட்,யுஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


விலை:
சியோமி 75-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் 80வாட் ஸ்பீக்கர் ஆதரவு கொண்டுள்ளது, அதன்பின்பு இந்த சாதனத்தின் விலைப் பொறுத்தவரை ரூ.95,000-ஆக உள்ளது. குறிப்பாக 35.1 கிலோகிராம் எடை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி
மாடல்.


Click it and Unblock the Notifications