Home
Gadgets

வெறும் ரூ.13,999/- முதல் சியோமி மி டிவி 4ஏ & மி டிவி4 : இரண்டில் எதை வாங்கலாம்.?

புதிய சியோமி டிவியின் ரிமோட் பொறுத்தவரை ப்ளூடூத் மற்றும் 11பட்டன் அம்சங்களை கொண்டுள்ளது.

By Prakash S

ஸ்மார்ட்போன் விற்பனையில் இந்தியாவில் முதல் இடத்தில் உள்ளது சியோமி நிறுவனம், கடந்த ஆண்டு பல மில்லியன் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது சியோமி. அந்த வரிசையில் இப்போது சியோமி டிவி மாடல்களை இந்திய முழுவதும் விற்பனை செய்ய தயார் நிலையில் உள்ளது அந்நிறுவனம்.

சியோமி மி டிவி 4 மற்றும் சியோமி மி டிவி 4ஏ இரண்டு மாடல்களும் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சியோமி மி டிவி 4ஏ மாடல்கள் பொறுத்தவரை 32-இன்ச் 1366x768 பிக்சல் எச்டி டிஸ்பிளே மற்றும் 43-இன்ச் 1920x1080 பிக்சல் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு சியோமி மி டிவி 4ஏ 32-இன்ச் மாடலின் விலைப் பொறுத்தவரை ரூ.13,999-ஆக உள்ளது.

சியோமி மி டிவி 4 மற்றும் சியோமி மி டிவி 4ஏ:

சியோமி மி டிவி 4 மற்றும் சியோமி மி டிவி 4ஏ:

சியோமி மி டிவி 4 உயர் இறுதியில் 55-இன்ச் ஸ்கீரின் கொண்ட ஸ்மார்ட் டிவி மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது, அதன்படி சியோமி மி டிவி 4ஏ உயர் இறுதியில் 43-இன்ச் ஸ்கீரின் கொண்ட ஸ்மார்ட் டிவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் சிறப்பம்சங்களை இப்போது பார்ப்போம்.

சியோமி மி டிவி 4 அம்சங்கள்:

சியோமி மி டிவி 4 அம்சங்கள்:

சியோமி மி டிவி 4 பொறுத்தவரை 55-இன்ச் ஸ்கீரின் மற்றும் 4கே தீர்மானம் கொண்டவையாக உள்ளது, அதன்பின்பு 3840x2160 பிக்சல் மற்றும் மெல்லிய பெசல்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

செயற்கை நுண்ணறிவு :

செயற்கை நுண்ணறிவு :

55-இன்ச் ஸ்கீரின் கொண்ட சியோமி மி டிவி 4 மாடல் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஹச்.டி.ஆர் தொழில்நுட்பம் மற்றும் 4.9 மில்லிமிட்டர் அளவு தடிமானக உள்ளது . இந்த புதிய சியோமி டிவி. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை சார்ந்து இருக்கும் பேட்ச்வால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் டீப் லெர்னிங் வழிமுறை கொண்டு இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செட்-டாப் பாக்ஸ்:

செட்-டாப் பாக்ஸ்:

சியோமி மி டிவி 4 மாடல் பொதுவாக பேட்ச்வால் தொழில்நுட்பம் கொண்டு இயங்குவாதல் செட்-டாப் பாக்ஸ் மற்றும் இண்டர்நெட்டில் கிடைக்கும் தரவுகளை ரிமோட் மூலம் தேர்வு செய்து பல்வேறு வீடியோக்களை பார்க்க முடியும்.

ரிமோட்:

ரிமோட்:

புதிய சியோமி டிவியின் ரிமோட் பொறுத்தவரை ப்ளூடூத் மற்றும் 11பட்டன் அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் ஸ்மார்ட் டிவி மற்றும் செட்-டாப் பாக்ஸ் அனுபவத்தை ஒற்றை ரிமோட் வழங்குவதால், ஒவ்வொன்றிற்கும் தனிப்பட்ட ரிமோட் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.

குவாட்கோர்:

குவாட்கோர்:

புதிய சியோமி மி டிவி 4 பொதுவாக 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஏம்லாஜிக் கார்டெக்ஸ் ஏ53 எஸ்ஒசி அமைப்பு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் 750 மெகாஹெர்ட்ஸ் மாலி-டி830 எம்பி2 ஜிபியு இவற்றுள் அடக்கம்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
 சேமிப்பு:

சேமிப்பு:

2ஜிபி டிடிஆர்4 டூயல்-சேனல் ரேம் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு(இஎம்எம்சி 5.1) ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் ப்ளூடூத் எச்டிஎம் போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த சியோமி மி டிவி 4

டால்பி ஆடியோ ஸ்பீக்கர்:

டால்பி ஆடியோ ஸ்பீக்கர்:

2x 8Wடால்பி ஆடியோ ஸ்பீக்கர், டிடிஎஸ்-எச்டி இவற்றுள் அடக்கம், மேலும் சாம்சங், சோனி, எல்ஜி டிவிக்களை விட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது சியோமி மி டிவி 4.

சியோமி மி டிவி 4ஏ அம்சங்கள்:

சியோமி மி டிவி 4ஏ அம்சங்கள்:

சியோமி மி டிவி 4ஏ பொதுவாக 43-இன்ச் 1920x1080 பிக்சல் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1.5ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் டி962-எஸ்எக்ஸ் கார்டெக்ஸ்-ஏ53 பிராசஸர் - மாலி-450 எம்பி3 ஜிபியு செயலிகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி 2.0, ஈத்தர்நெட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் மற்றும் 2ஜிபி ரேம் கொண்டுள்ளது சியோமி மி டிவி 4ஏ. மேலும் 2 x 5 வாட் ஸ்பீக்கர், டால்பி விர்ச்சுவல் சரவுண்ட் சவுண்ட், DTS மற்றும் பாஸ் பூஸ்ட்வசதிகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

பேட்ச்வால்:

பேட்ச்வால்:

இந்த சியோமி மி டிவி 4ஏ ஸ்மார்ட் டிவியில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் சார்ந்த பேட்ச்வால் யூசர் இன்டர்ஃபேஸ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. ஆன்லைன் தரவுகள் மற்றும் செட்-டாப் பாக்ஸ் போன்றவற்றை ஒற்றை தளத்தில் வழங்கும் வேலையை பேட்ச்வால் வேலை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 விலை:

விலை:

55-இன்ச் ஸ்கீரின் கொண்ட சியோமி மி டிவி 4 மாடலின் விலைப் பொறுத்தவரை ரூ.39,999-ஆக உள்ளது, அதன்பின்பு 43-இன்ச் ஸ்கீரின் கொண்ட சியோமி மி டிவி 4ஏ மாடலின் விலை ரூ.22,999-என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வாங்கச் சிறந்தது:

வாங்கச் சிறந்தது:

55-இன்ச் ஸ்கீரின் கொண்ட சியோமி மி டிவி 4 ஸ்மார்ட் டிவியில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது, இருந்தபோதிலும் அதன் விலை சற்று உயர்வாக இருக்கிறது. அதே பேட்ச்வால் யூசர் இன்டர்ஃபேஸ் செயற்கை நுண்ணறிவு கொண்ட சியோமி மி டிவி 4ஏ மாடலில் பல்வேறு சிறப்பம்சங்கள் இருந்தாலும், பட்ஜெட் விலையில் வருவதால் இந்த மி டிவி 4ஏ ஸ்மார்ட் டிவி வாங்கச் சிறந்தது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi TV 4 Mi TV 4A How Different Are These Two TVs; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X