சியோமி நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு ஸ்மார்ட்போன் மற்றும் டிவி சாதனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்படி நாளை சியோமி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதனுடன் சியோமி மி டிவி 4 மாடல் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது.
சியோமி அதிநவீன எல்இடி டிவி மாடல்களை இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது, அதன்படி நாளை ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போன் உடன் சியோமி மி டிவி 4 அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு இந்த டிவி மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியோமி:
2018-ம் ஆண்டு சியோமி நிறுவனத்தின் முதல் தயாரிப்பு 14-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு தில்லியில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் சியோமி நிறுவனத்தின் சாதனங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபிளிப்கார்ட்
சீன ஸ்மார்ட்போன் பிராண்ட் சியோமி நிறுவனம் அதன் சாதனங்களை இ-காமர்ஸ் பங்குதாரர் ஃபிளிப்கார்ட் மூலம் அறிமுகப்படுத்தி விற்பனைக்கு கொண்டுவரும், மேலும் சியோமி நிறுவனத்தின் டீஸர் வீடியோ சமீபத்தில் ஃபிளிப்கார்ட் தளத்தில் வெளியிடப்பட்டது.
சியோமி மி டிவி 4:
சியோமி மி டிவி 4 மாடல் மெல்லிய 4.9 மிமீ உடலை கொண்டுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு பல்வேறு நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த சியோமி டிவி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஸ்பிளே:
சியோமி மி டிவி 4 மாடல் பொறுத்தவரை மூன்று டிஸ்பிளே வடிவமைப்பில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதவாது 49-இன்ச்,
55-இன்ச் மற்றும் 65-இன்ச் என மூன்று டிஸ்பிளே வடிவமைப்பில் வெளிவரும்.
இணைப்பு ஆதரவுகள்:
வயர்லெஸ் ஸ்பீக்கர், எச்டிஎம்ஐ, யூ.எஸ்.பி 3.0, லேன் நெட்வொர்க் மற்றும் பல இணைப்பு ஆதரவுகளுடன் சியோமி மி டிவி 4 மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை:
சியோமி நிறுவனத்தின் புதிய டிவி மாடல் விலை பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை, மேலும் மலிவான விலையில் இந்த டிவி மாடல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Gizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.