Home
Gadgets

65-இன்ச் 4கே எல்இடி பெசல்-லெஸ் சியோமி மி டிவி 4 அறிமுகம்: விலையை கேட்டால் ஷாக் ஆகிடுவிங்க.!

ப்ளூடூத் ரிமோட் கண்ட்ரோல் இ 360 டிகிரி தொழில்நுட்ப வசதி, குரல் கட்டளை போன்ற பல்வேறு சிறப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த 65-இன்ச் சியோமி மி டிவி 4 மாடல்.

சியோமி நிறுவனம் இப்போது புதிய தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்டிவி மாடல்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகிறது, மேலும் இதற்கு முன்பு அறிமுகம் செய்த சியோமி ஸ்மார்ட் டிவிகள் அனைத்தும் இந்தியாவில் அதிக
வரவேற்பை பெற்றுள்ளது, அதேசமயம் அதிக விற்பனையும் செய்யப்பட்டுள்ளது.

65-இன்ச் 4கே எல்இடி பெசல்-லெஸ் சியோமி மி டிவி 4 அறிமுகம்: விலை?

அந்தவகையில் நேற்று 65-இன்ச் 4கே எல்இடி பெசல்-லெஸ் சியோமி மி டிவி 4 மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது சியோமி நிறுவனம். இந்த டிவி மாடல் பொறுத்தவரை சிறந்த மென்பொருள் மற்றும் வன்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, விரைவில் இந்திய சந்தையில் இந்த டிவி மாடலை விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது சியோமி நிறுவனம். மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்பபோம்.

 எச்டிஆர் ஆதரவு:

எச்டிஆர் ஆதரவு:

65-இன்ச் 4கே எல்இடி பெசல்-லெஸ் சியோமி மி டிவி 4 பொறுத்தவரை எச்டிஆர் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது, அதே சமயம் மெல்லிய 7.5 மிமீ அளவு தடிமனுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான மாடல்.

சேமிப்பு:

சேமிப்பு:

புதிய சியோமி ஸ்மார்ட் டிவி மாடல் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு Amlogic கார்டெக்ஸ் ஏ53 குவாட்-கோர் செயலி மற்றும் 1.5ஜிகாஹெர்ட்ஸ் மாலி-450ஜிபியு வசதியுடன் இந்த சியோமி மி டிவி 4 களமிறங்கியுள்ளது.

ஆண்ட்ராய்டு ஓஎஸ்

ஆண்ட்ராய்டு ஓஎஸ்

ப்ளூடூத் ரிமோட் கண்ட்ரோல், 360 டிகிரி தொழில்நுட்ப வசதி, குரல் கட்டளை போன்ற பல்வேறு சிறப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த 65-இன்ச் சியோமி மி டிவி 4 மாடல். பின்பு பேட்ச்வால் யுஐ மற்றும் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அடிப்படையாக கொண்டு சியோமி மி டிவி 4 இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

யுஎஸ்பி போர்ட், எச்டிஎமஐ போர்ட், வைஃபை, ப்ளூடூத் மற்றும் இணையதள ஆதரவு போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் ஆடியோ
வசதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

விலை:

விலை:

65-இன்ச் 4கே எல்இடி பெசல்-லெஸ் சியோமி மி டிவி 4 மாடலின் இந்திய விலை மதிப்பு ரூ.63,000-ஆக உள்ளது, வரும் நவம்பர் 11-ம் தேதி முதல் இந்த டிவி மாடல் சீனாவில் விற்பனைக்கு வரும்.

இரண்டு லேப்டாப்:

இரண்டு லேப்டாப்:

65-இன்ச் 4கே எல்இடி பெசல்-லெஸ் சியோமி மி டிவி 4 மாடல் உடன் இரண்டு புதிய லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது சியோமி நிறுவனம். 15.6-இன்ச் மற்றும் 13.3-இனச் கொண்ட இந்த லேப்டாப் மாடல்கள் சிறந்த தொழில்நுட்ப
வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi TV 4 65-inch with 4K LED panel launched in China: Price, features: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X