சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு: இப்போதே முந்துங்கள்.!
சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது, குறிப்பாக இந்தியாவில் சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்கள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடி விலைகுறைப்பு
இந்நிலையில் சியோமி ஸ்மார்ட் டிவிகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது, அவற்றின் பட்டியலைப் பார்ப்போம்:
43-இன்ச் மி டிவி 4ஏ மாடலின் முந்தைய விலை ரூ.22,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.21,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
32-இன்ச் மி டிவி 4ஏ மாடலின் முந்தைய விலை ரூ.12,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.12,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் 32-இன்ச் மி டிவி 4சி ப்ரோ மாடலுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது.
55-இன்ச் மி டிவி 4எக்ஸ் ப்ரோ மாடலின் முந்தைய விலை ரூ.39,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.34,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
55-இன்ச் மி டிவி 4 ப்ரோ மாடலின் முந்தைய விலை ரூ.47,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.44,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சியோமி ஸ்மார்ட்போன்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி ஆண்டுவிழா:
குறிப்பாக சியோமி நிறுவனத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு இந்த அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும்
இந்த வலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஜீலை 25-ம் தேதி வரை மட்டுமே இந்த விலைகுறைப்பு சலுகை இருக்கும். மேலும் 55-இன்ச் சியோமி மி எல்இடி டிவி 4எக்ஸ் ப்ரோ சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சியோமி மி எல்இடி டிவி 4எக்ஸ் ப்ரோ(55-இன்ச்):
சியோமி மி எல்இடி டிவி 4எக்ஸ் ப்ரோ(55-இன்ச்) சாதனம் பொதுவாக 55-இன்ச் 4கே யுஎச்டி எச்டிஆர் 10-பிட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 4840x2160 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்துடன் வெளிவந்துள்ளது. மேலும் 12பட்டன் கொண்ட ரீமோட், ப்ளூடூத், வைஃபை போன்ற பல்வேறு சிறப்பம்சங்களும் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

சியோமி மி எல்இடி டிவி 4எக்ஸ் ப்ரோ(55-இன்ச்) மென்பொருள்:
சியோமி மி எல்இடி டிவி 4எக்ஸ் ப்ரோ(55-இன்ச்) சாதனத்தில் குவாட்-கோர் ஏஆர்எம் கார்டெக்ஸ்-ஏ53 செயலி மற்றும் 1.3ஜிகாஹெர்ட்ஸ் மாலி-450 ஜிபியு சிப்செட் வசதி இடம்பெறறுள்ளது, மேலும் எப்போதும் போல பேட்ச்வால் ஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ டிவி ஒஸ் வசதியைக் கொண்டுள்ளது இந்த சியோமி மி எல்இடி டிவி 4எக்ஸ் ப்ரோ மாடல். பின்பு க்ரோம்காஸ்ட்,பிளே ஸ்டோர், யூட்யூப் போன்ற பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications