Home
Gadgets

சியோமியின் புதிய மி ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 இந்தியாவில் அறிமுகம்.!

சியோமி நிறுவனத்தின் அனைத்து பொருட்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு கிடைக்கிறது, குறிப்பாக இந்நிறுவனத்தின் டிவிகளுக்கு மிகப் பெரிய வரவேற்ப்பு கிடைக்கிறது என்றுதான் கூறவேண்டும், ஏனெனில் கடந்த ஆண்டு இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

 சியோமி நிறுவனம் புதிய மி ட்ரூ

இந்நிலையில் சியோமி நிறுவனம் புதிய மி ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 மாடலை இந்தய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது, பின்பு இதனுடன் மி 10 5ஜி சாதனம் மற்றும் மி பாக்ஸ் 4கே உள்ளிட்ட சாதனங்களையும் சியோமி நிறுவனம்
அறிமுகம் செய்துள்ளது.

அதிக வளர்ச்சி

தற்சமயம் உலகளவில் அதிக வளர்ச்சி பெற்று வரும் ட்ரூ வயர்லெஸ் இயர்போன் சந்தையில் புதிய மி 2 மூலம் களமிறங்கியுள்ளது, பின்பு புதிய இயர்போன் இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 சியோமியின் இந்த மி ட்ரூ வயர்லெஸ் 2

குறிப்பாக சியோமியின் இந்த மி ட்ரூ வயர்லெஸ் 2 மாடலின் விலை ரூ.4999-என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,பின்புவரும் மே 12-ம் தேதி முதல் மே 17-ம் தேதி வரை இந்த இயர்போன் ரூ.1000 தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது, அதன்படி இது முதற்கட்டமாக ரூ.3999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

வயர்லெஸ் இயர்போன்ஸ் 2

மேலும் இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 மாடல் அமேசான், சியோமி வலைதளம் போன்றவற்றில் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விலையைப் பொருத்த வரை புதிய இயர்போன்ஸ் ரியல்மி பட்ஸ் ஏர் மாடலுக்கு நேரடி போட்டியாக இருக்கிறது. தவிர நாய்ஸ், போட் போன்ற சில நிறுவனங்களுக்கு போட்டியாக அறிமுகம் செய்துள்ளது.

 வயர்லெஸ் இயர்போன்ஸ் 2

சியோமின் மி ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 மாடலில் 14.2 எம்எம் டைனமிக் டிரைவர் மற்றும் டைட்டானியம் கம்போசிட்டைஃப்கிராம் உள்ளிட்ட சில வசதிகள் வழங்கப்பட்டுள்ளது,எனவே இது ஆடியோ தரம், கால் அழைப்புகளின் தரம். மற்றும் சிறப்பான பேட்டரி பேக்கப் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 மாடல்

சியோமியின் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 மாடல் ஆனது ப்ளூடூத் 5, டூயல் நாய்ஸ் கேன்சலிங் உள்ளிட்ட வசதிகளைகொண்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

யுஎஸ்பி டைப்-சி

குறிப்பாக இந்த சாதனத்திற்கு யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது, மேலும் பத்து நிமிடங்களில் சார்ஜ் செய்தால் ஒரு மணி நேரத்திற்கு இந்த அருமையான சாதனத்தை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi True Wireless Earphones 2 Launched: Price in India and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X