எம்ஐ ட்ரூ வயர்லெஸ் 2சி அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்!

|

சியோமி எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள் 2சி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

புதிய எம்ஐ ட்ரூ வயர்லெஸ் 2சி

புதிய எம்ஐ ட்ரூ வயர்லெஸ் 2சி

சியோமி தனது புதிய எம்ஐ ட்ரூ வயர்லெஸ் 2சி ஹெட்ஃபோன்களை இந்திய சந்தையில் ரூ.2,499 என்ற விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஹெட்செட்கள் இந்தியாவில் முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்ட எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்களின் மலிவு விலை பதிப்பாகும்.

ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள் 2 சி அம்சங்கள்

ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள் 2 சி அம்சங்கள்

எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்கள் 2சி முன்னதாக வெளியான மாடல்களின் எளிமை பதிப்பாக கூறப்படுகிறது. ப்ளூடூத் 5.0, இரட்டை மைக்ரோஃபோன்கள் இதில் இருக்கிறது. அதோடு அழைப்புகள் வரும்போது சுற்றுப்புற சத்தத்தை பில்டர் செய்யும் வகையில் இஎன்சி அம்சம் இதில் இருக்கிறது. இதில் 14.2 மிமீ ஆடியோ இயக்கிகள் உள்ளது.

சார்ஜிங் அம்சம்

சார்ஜிங் அம்சம்

எம்ஐ ட்ரூ வயர்லெஸ் 2 சி ஹெட்செட்டுகள் சார்ஜிங் அம்சத்தை பொருத்தவரை இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 மணிநேர பயன்பாட்டை ஆதரிக்கிறது. இதை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 1.5மணி நேரம் எடுக்கும்.

(வீடியோ)சூரியனை விட மிகப்பெரிய நட்சத்திரத்தை விழுங்கும் கருந்துளை: அரிய நிகழ்வு!(வீடியோ)சூரியனை விட மிகப்பெரிய நட்சத்திரத்தை விழுங்கும் கருந்துளை: அரிய நிகழ்வு!

டச் முறை கட்டுபாடு அம்சம்

டச் முறை கட்டுபாடு அம்சம்

இந்த புதிய இயர்போன்கள் சத்தத்தை அதிகரிப்பதற்கும் குறைப்பதற்கும் மற்றும் பாடல் மாற்றுவதற்கு டச் முறை கட்டுபாடு அம்சம் உள்ளது. இதில் உள்ள பேஸ்ரெட் சென்சார் இதை காதில் இருந்து அகற்றியவுடன் தாமாகவே ப்ளே பேக்கை நிறுத்தம் செய்கிறது.

அணிவதற்கு வசதியாக வடிவமைப்பு

அணிவதற்கு வசதியாக வடிவமைப்பு

இயர்போன்களின் அரை காது மாதிரியான வடிவமைப்பு காதுகளில் அணிவதற்கு வசதியாக இருக்கும் அதோடு இந்த வடிவமைப்பு காதுகளில் இருந்து தவறி விழுவதை தடுக்கிறது. இந்த இயர்போன்கள் ஒவ்வொன்றும் 4.7 கிராம் எடையுள்ளதாக உள்ளது. இந்த சாதனம் வெள்ளை நிறத்தில் கிடைக்கிறது. இந்த இயர்போன்கள் பிளிப்கார்ட் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் அதிகாரப்பூர்வ சியோமி ஆன்லைன் தளத்தில் கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ்

ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ்

இசை இயக்குவதற்கு, அழைப்புகளை மேற்கொள்வதற்கு கூகுள் அசிஸ்டெண்ட், சிரி குரல் கட்டுப்பாடு அமைப்பு செயல்படுத்துவதற்கு டச் கட்டுப்பாடு உதவுகிறது. இந்த இயர்போன்கள் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் சாதனங்களுடன் இயங்குகின்றன.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi True Wireless Earbuds 2C Launched in India: Price and Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X