பட்ஜெட் விலையில் சியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் அறிமுகம்! விலை என்ன?

|

சியோமி நிறுவனம், தனது முதல் சியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் (Xiaomi Mi Smart Water Purifier) சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வாட்டர் பியூரிஃபையர் குறிப்பாக இந்தியப் பயனர்களுக்காக பென்டா சுத்திகரிப்பு செயல்முறை சேவையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் டூ-இட்-யுவர்செல்ஃப் வாட்டர் பில்டர்

இந்தியாவின் முதல் டூ-இட்-யுவர்செல்ஃப் வாட்டர் பில்டர்

இந்த புதிய சியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர், UV மற்றும் RO போன்ற அம்சங்களை ஆதரிக்கும் விதத்தில் ஸ்மார்ட் டிசைன் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்தியாவின் முதல் டூ-இட்-யுவர்செல்ஃப் (Do It Yourself) திறனுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் இதுதான் என்று சியோமி தெரிவித்துள்ளது.

எப்.டி.ஏ (FDA) அங்கீகாரம்

எப்.டி.ஏ (FDA) அங்கீகாரம்

நீர் சுத்திகரிப்பு சேமிப்பிற்காக, இந்த ஸ்மார்ட் வாட்டர் ஃபில்டரில் உள்ளமைக்கப்பட்ட 7 லிட்டர் ஸ்டோரேஜ் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் FDA ஆல் அங்கீகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலவில் கொட்டிகிடக்கும் பொக்க்ஷிம்-சுரண்டி எடுக்க அமெரிக்காவின் பிளான் அம்பலம்.!நிலவில் கொட்டிகிடக்கும் பொக்க்ஷிம்-சுரண்டி எடுக்க அமெரிக்காவின் பிளான் அம்பலம்.!

பிரத்தியேக ஆன்டி- ஷர்ட் சர்கியூட் தொழில்நுட்பம்

பிரத்தியேக ஆன்டி- ஷர்ட் சர்கியூட் தொழில்நுட்பம்

நிலையான மின்சாரம் பற்றாக்குறை உள்ள இந்தியப் பயனர்களைக் கவனத்தில் கொண்டு, ஷர்ட் சர்கியூட் பிரச்சனைகளிலிருந்து பதிப்படையாமல் இருப்பதற்கென்று பிரத்தியேக தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் சமையல் அறையில் உள்ள இன்டிரியர் அலங்காரத்திற்கு ஏற்றார் போல் இதன் டிசைன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் சிறப்பம்சம்

சியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் சிறப்பம்சம்

பாலிப்ரொப்பிலீன், கார்பன் ஃபில்டர் மற்றும் UV லைட் மூலம் உங்களுடைய தண்ணீர் 99.99% கச்சிதமாக சுத்திகரிக்கப்படுகிறது. இதனால் சியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையரில் சுத்திகரிக்கப்படும் நீர் மிகவும் பாதுகாப்பானதாகவும், சுவையானதாகவும் இருக்கும் என்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சந்திரயான் 2 : இன்று அனைவரும் எதிர்பார்த்த விக்ரம் லேண்டர் குறித்த தகவலை தரும் நாசா ஆர்பிட்டர்.!சந்திரயான் 2 : இன்று அனைவரும் எதிர்பார்த்த விக்ரம் லேண்டர் குறித்த தகவலை தரும் நாசா ஆர்பிட்டர்.!

விலை விபரம்

விலை விபரம்

சியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர்,அமேசான் தளம், பிளிப்கார்ட் தளம் மற்றும் சியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான mi.com ஆகின தளங்களில் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் வெறும் ரூ.11,999 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் என்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Smart Water Purifier Launched In India With RO and UV Feature : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X