Home
Gadgets

Xiaomi Mi Router 4C: பட்ஜெட் விலையில் சியோமி நிறுவனத்தின் புதிய ரவுட்டர் அறிமுகம்.!

சியோமி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் அனைத்து சாதனங்களையும் அறிமுகம் செய்கிறது.

மி ரவுட்டர் 4சி

மி ரவுட்டர் 4சி

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியாவில் மி ரவுட்டர் 4சி (Mi Router 4C) மாடலை அறிமுகம்செய்துள்ளது. குறிப்பாக மி ரவுட்டர் 3சி-க்கு பின்பு இப்போது தான் புதிய ரவுட்டர் மாடலை அறிமுகம் செய்துள்ளதுஇந்நிறுவனம்.

மேலும் இந்த மி ரவுட்டர் 4சி மாடல் ஆனது பழைய மாடலை விட மேம்பட்ட சில மாற்றங்களுடன் வருகிறது, குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டெனா

நான்கு ஆண்டெனா

மி ரவுட்டர் 4சி மாடல் ஆனது 300Mbps வரை நெட்வொர்க் வேகத்தை ஆதரிக்கும் திறனைக் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனம் நான்கு ஆண்டெனாக்களுடன் அனைத்து திசைகளிலும் செயல்படும் வகையில் வெளிவந்துள்ளது.

 2.4ஜிகாஹெர்ட்ஸ்

2.4ஜிகாஹெர்ட்ஸ்

குறிப்பாக வைஃபை இல்லாத பகுதிகள் மற்றும் இணைப்பு சேவையற்ற இடங்களில் இணைய சேவை வழங்குவதைஉறுதியளிக்கிறது. மேலும் இந்த ரவுட்டர் தாமதமில்லாத கேமிங் மற்றும் நெட்வொர்க்கில் மென்மையான வீடியோ
ஸ்ட்ரீமிங்கை உறுதி செய்கிறது என சியோமி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தபுதிய ரவுட்டர் 2.4ஜிகாஹெர்ட்ஸ் நெட்வொர்க்கை ஆதரிக்கிறது, பின்பு வேகமான நெட்வொர்க்கிற்கு எந்த ஆதரவுஇல்லை என்பதை நினைவில் கொள்க. மேலும் செயல்திறன் புள்ளிவிவரங்கள் பிற ரவுட்டர்களுடன் இணையாக
இருக்கும்போது,சியோமி அதன் ரவுட்டர் உடன் சில ஸ்மார்ட் சேவைகளை வழங்குகிறது. நெட்வொர்க்கில் கூடுதல்கட்டுப்பாட்டை வழங்கும் மி வைஃபை செயலியுடன் பயனர்கள் ரவுட்டர்-ஐ இணைக்கிறார்கள்.

 வைஃபை

குறிப்பாக ரவுட்டர் வைஃபை தேர்வுமுறை அம்சத்தையும் பெறுகிறது, இது அதிக நெட்வொர்க் பயன்பாட்டின் போதுநெட்வொர்க்குகளின் வேகத்தை அதிகரிக்கும். மி ரவுட்டர் 4சி உங்கள் வீட்டில் உள்ள மற்றொரு வைஃபைரவுட்டருக்கு வைஃபை நீட்டிப்பு சாதனமாக கூட பயன்படுத்தப்படலாம்.

விலை ரூ.999 மட்டுமே

விலை ரூ.999 மட்டுமே

தற்சமயம் மி ரவுட்டர் 4 மாடல் ஆனது வெள்ளை நிறத்தில் வெளிவந்துள்ளது, மேலும் இந்த சாதனத்தின்விலை ரூ.999 மட்டுமே. குறிப்பாக மி.காம் வலைதளத்தில் இந்த சாதனத்தை வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Router 4C Launched: Price in India, Features and More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X