டூயல் பேண்ட் ஆதரவுடன் சியோமி மி ரவுட்டர் 3ஜி.!

|

சியோமி நிறுவனம் சீனாவில் மி ரவுட்டர் 3ஜி என்றவொரு புதிய வயர்லெஸ் பிராட்பேண்ட் ரவுட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. சியோமி மி ரவுட்டர் 3ஜி சாதகமானது அதன் முன்னோடியான மி ரவுட்டர் 3 சாதனத்தோடு ஒப்பிடும்போது குறிப்பிட்ட சில கூடுதல் அம்சங்களை கொண்ட இரட்டை கிகாபிட் பேண்ட் திசைவியாக உள்ளது. இந்த வைஃபை திசைவி சுமார் ரூ.2,360/- என்ற விலை நிர்ணயத்தில் வெள்ளை நிறத்தில் சீன சந்தையில் மட்டுமே கிடைக்கிறது.

டூயல் பேண்ட் ஆதரவுடன் சியோமி மி ரவுட்டர் 3ஜி.!

முன்னோடியோடு ஒப்பிடும்போது சியோமி மி ரவுட்டர் 3ஜி சாதனமானது இரட்டை பேண்ட், யூஎஸ்பி 3.0, 128எம்பி ரோம் மற்றும் 256எம்பி ரேம் ஆகிய நான்கு ஆதரவு மேம்பாடுகள் கொண்டு வருகிறது. இதன் 'கிகாபிட் ஈதர்நெட்' போர்ட் வடிவமைப்பு 100எம் ஃபைபர்-பிளாக்பேட் பயன்படுத்தி ஒரே நேரத்தில் இது 128 சாதனங்களுக்கு இணைப்பை வழங்கும் திறன் கொண்டது.

மி ஹோம் வைஃபை பயன்பாட்டின் உதவியுடன் இதன் 'அகலக்கற்றை முடுக்கம்' அம்சமானது தரவு வேகத்தை 5 மடங்கு பெற உதவும். இந்த அம்சம் பெரும்பாலான பகுதிகளில் மற்றும் சில யூனிகாம் பிராட்பேண்ட் சந்தாதாரர்களுக்கு சீனாவில் கிடைக்கிறது.

வடிவமைப்பு வாரியாக, மி ரவுட்டர் 3ஜி ஆனது நான்கு அதிர்வெண் மல்டிசிக்யூட்டர் ஹை கெயின் அட்டென்னா கொண்டிருக்கிறது, அவை ஒரே மாதிரியான அதிர்வெண் குறுக்கீடுகளை குறைக்ககும். மேலும் அதன் மூலம் சிறந்த நெட்வொர்க் கவரேஜிற்காக சிக்னல் ஆதாய விளைவையும் வலுப்படுத்தும்.

டூயல் பேண்ட் ஆதரவுடன் சியோமி மி ரவுட்டர் 3ஜி.!

25.6எம்பி ரேம் மற்றும் 128எம்பி ரோம் கொண்டு முந்தைய வெளியீட்டை விட வேகமாக தரவு செயலாக்கத்தை வழங்குகிறது. இது டிரான்ஸ்மிஷன் போது பிணைய தாமதங்களை குறைக்க ஒரு இரட்டை மைய 880மெகாஹெர்ட்ஸ் மீடியா டெக் எம்டி7621ஏ செயலி மூலம் இயக்கப்படுகிறது. உள்ளூர் கோப்புகளை பகிர்ந்து கொள்ள விரைவான உள்ளூர் ஏரியா நெட்வொர்க்கிற்கான யூஎஸ்பி 3.0 தொழில்நுட்பத்தையும் இது ஆதரிக்கிறது.

சியோமி மி ரவுட்டர் 3ஜி ஆனது இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து சாதனங்களையும் தரவையும் பாதுகாக்க உதவுகிறது. திசைவியின் பரிமாணங்களை பொறுத்தமட்டில் 195x131x177.3 மிமீ மற்றும் 260.4 கிராம் எடையும் கொண்டுள்ளது. கடந்த மாதம், சியோமி நிறுவனம் அதன் மி ரவுட்டர் 3 சாதனத்தை தவிர்த்துவிட்டு ரூ.1,199/-க்கு அதன் மி ரவுட்டர் 3சி சாதனத்தை தொடங்கியது என்பதும் இது ஜூன் 8 முதல் அமேசான் இந்தியா மற்றும் ஃப்ளிப்கார்ட் வழியாக கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Router 3G Launched With Dual-Band Support, 'Broadband Acceleration'. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X