இந்தியாவில் அசத்தலான சியோமி 75-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!

|

சியோமி நிறுவனம் இந்தியாவில் மி 11 அல்ட்ரா, மி 11எக்ஸ், மி 11எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்கள் உடன் புதிய 75-இன்ச் Mi QLED TV மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

75-இன்ச் Mi QLED TV மாடல்

75-இன்ச் Mi QLED TV மாடல்

சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது 75-இன்ச் Mi QLED TV மாடல் ஆனது வரும் ஏப்ரல் 27-ம் தேதி மதியம் 12 மணிஅளவில் பிளிப்கார்ட் மற்றும் மி.காம் போன்ற வலைத்தளங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

சியோமி 75-இன்ச் Mi QLED TV மாடல் 4கே யுஎச்டி பேனல் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனம் 3,840 x 2,160 தெளிவுத்திறன் மற்றும் 178 டிகிரி கோணத்துடன் வருகிறது. இதுதவிர டைனமிக் லோக்கல் டிம்மிங், டால்பி விஷன், எச்டிஆர் 10+ மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. எனவே இந்த அம்சங்கள் சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம்.

இந்த கூட்டணி நமக்கு லாபம்தான்: ஜியோ, ஐடெல் இணைந்து உருவாக்கும் மிகக் குறைந்த விலை ஸ்மார்ட்போன்!இந்த கூட்டணி நமக்கு லாபம்தான்: ஜியோ, ஐடெல் இணைந்து உருவாக்கும் மிகக் குறைந்த விலை ஸ்மார்ட்போன்!

ஆண்ட்ராய்டு 10

ஆண்ட்ராய்டு 10

இந்த புதிய ஸ்மார்ட் டிவியில் 1.5ஜிகாஹெர்ட் மீடியாடெக் எம்டி9611 பிராசஸர் வசதியுடன் மாலி ஜி52 P2 GPU ஆதரவு உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சியோமி 75-இன்ச் டிவி மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இரண்டு டிஸ்பிளே கொண்ட சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?இரண்டு டிஸ்பிளே கொண்ட சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?

மெமரி வசதி இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக சியோமி 75-இன்ச் Mi QLED TV மாடலில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் YouTube ஆப் பயன்பாடுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்.

30 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டம்

30 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டம்

அலெக்ஸா மற்றும் கூகிள் அசிஸ்டென்ட் குரல் கட்டளைகளில் ஹேண்ட்ஸ் ஃப்ரீ கட்டுப்பாட்டுக்கான உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோனையும் இது கொண்டுள்ளது. அலெக்சா ஆதரவுடன் சியோமியின் முதல் ஸ்மார்ட் டிவி இதுவாகும். இந்த ஸ்மார்ட் டிவியின் ஆடியோ பொறுத்தவரை,30 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது, இதில் இரண்டு ட்வீட்டர்கள் மற்றும் நான்கு வூஃப்பர்கள் உள்ளன. மேலும் இது டால்பி ஆடியோவைக் கொண்டுள்ளது, ஆனால் HDMI மூலம் இணக்கமான ஆடியோ சாதனங்களில் டால்பி அட்மோஸை ஆதரிக்கிறது.

ட்ட Chromecast உள்ளது

புளூடூத் 5.0, ஒரு HDMI 2.1 போர்ட், இரண்டு HDMI 2.0 போர்ட்கள், இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள் மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் இந்த சாதனத்தில் உள்ளமைக்கப்பட்ட Chromecast உள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவரா நீங்கள்- ஏப்.,28முதல் கோவிட்-19 தடுப்பூசி முன்பதிவு: எதில், எப்படி முன்பதிவு செய்வது?18 வயதுக்கு மேற்பட்டவரா நீங்கள்- ஏப்.,28முதல் கோவிட்-19 தடுப்பூசி முன்பதிவு: எதில், எப்படி முன்பதிவு செய்வது?

சியோமி 75-இன்ச் Mi QLED TV மாடலின் விலை ரூ.1,19,999-ஆக உள்ளது

சியோமி 75-இன்ச் Mi QLED TV மாடலின் விலை ரூ.1,19,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த சாதனம் விற்பனைக்கு வரும்போதுகுறிப்பிட்ட சலுகைகள் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi Mi QLED TV 75 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X