30,000mah சக்தி கொண்ட புதிய Mi பவர் பேங்க் பூஸ்ட் புரோ.. விலை இவ்வளவு கம்மியா?

|

சியோமி நிறுவனம் இந்தியாவில் 30,000 எம்ஏஎச் சக்தி கொண்ட புதிய மி பவர் பேங்க் பூஸ்ட் ப்ரோ (Mi Power Bank Boost Pro) சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கிரவூட் ஃபண்டிங் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சியோமி நிறுவனம் இந்த புதிய Mi பவர் பேங்க் சாதனத்தைச் சிறப்புத் தள்ளுபடி விலையில் வழங்குகிறது. இந்த சிறப்புத் தள்ளுபடியின் கீழ் எப்படி இந்த புதிய பவர் பேங்க் சாதனத்தை நாம் வாங்கலாம் என்ற முழு விபரத்தை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

புதிய மி பவர் பேங்க் பூஸ்ட் புரோ

புதிய மி பவர் பேங்க் பூஸ்ட் புரோ

சியோமி நிறுவனம், இந்த ஆண்டு தொடர்ச்சியாகப் பல எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் சியோமி நிறுவனம் இந்த புதிய மி பவர் பேங்க் பூஸ்ட் புரோ சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இப்போது நிறுவனம் 15 நாட்களில் 5,000 யூனிட் என்ற குறிக்கோளுடன் கிரவூட் ஃபண்டிங் மூலம் ஆர்டருக்கு கிடைக்கிறது. சியோமி மே 15 முதல் இந்த புதிய மி பவர் பேங்க் பூஸ்ட் புரோ தயாரிப்புகளை அனுப்பத் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது. இது ஒற்றை பிளாக் வண்ண விருப்பத்தில் மட்டும் கிடைக்கும்.

30,000 எம்ஏஎச் திறன் கொண்ட பவர் பேங்க்

30,000 எம்ஏஎச் திறன் கொண்ட பவர் பேங்க்

பெயர் குறிப்பிடுவதுபோல், இந்தியாவில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சியோமி பவர் பேங்க் 30,000 எம்ஏஎச் திறன் கொண்டது. மேலும், புதிய பவர் பேங்க் அதன் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் வழியாக 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. அதன் 30W பாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி, மி பவர் பேங்க் பூஸ்ட் புரோ வெறும் 7.5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யப்படுகிறது. 30,000 எம்ஏஎச் திறன் கொண்ட இந்த பவர் பேங்க் சாதனம் நிச்சயம் பயனுள்ள ஒரு சாதனம் தான்.

அடுத்த சிக்கல்: எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களா நீங்கள்?- இனி இந்த பிரச்சனை!அடுத்த சிக்கல்: எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களா நீங்கள்?- இனி இந்த பிரச்சனை!

போர்ட் விபரம்

போர்ட் விபரம்

இது மொத்தம் நான்கு போர்ட்களுடன் வருகிறது. ஒரே நேரத்தில் மூன்று சாதனங்களை சார்ஜ் செய்ய ஒரு மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் மற்றும் ஒரு யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்டுடன், இரண்டு யூ.எஸ்.பி டைப்-ஏ போர்ட்கள் இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்துடன் கிடைக்கக்கூடிய யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் 24W ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் பவர் பேங்க் சாதனத்தை சார்ஜ் செய்ய பயன்படுத்தப்படுகிறது. புதிய மி பவர் பேங்க் பூஸ்ட் புரோ சாதனம் பல பாதுகாப்பு அம்சங்களுடனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

16 அடுக்கு பாதுகாப்பு

16 அடுக்கு பாதுகாப்பு

இது அதிக சக்திக்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது. ஷார்ட் சர்கியூட் பாதுகாப்பு, ஓவர் கரண்ட் பாதுகாப்பு, இன்டலிஜெண்ட் டெம்ப்ரேச்சர் கண்ட்ரோல் மற்றும் பலவற்றிலிருந்து 16 அடுக்கு பாதுகாப்பை இந்த சாதனம் கொண்டுள்ளது. இது பவர் டெலிவரி 3.0 ஐயும் கொண்டுள்ளது, எனவே, இது கிட்டத்தட்ட எல்லா சாதனங்களுடனும் இணக்கமானது என்று நிறுவனம் கூறியுள்ளது. கடைசியாக, மி பவர் பேங்க் பூஸ்ட் புரோ 30000 எம்ஏஎச் சாதனம் 154.5 x 72.3 x 38.9 மிமீ பரிமாணங்களை அளவிடுகிறது மற்றும் 640 கிராம் எடையைக் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Power Bank Boost Pro With 30000mAh Battery Launched : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X