சியோமி: ஒரே சார்ஜில் 10 முறை சார்ஜ் செய்துகொள்ளும் புதிய பவர் பேங்க் அறிமுகம்! விலை என்ன?

|

சியோமி நிறுவனம் அதன் 30,000 எம்.ஏ.எச் பேட்டரி பவர் கொண்ட பவர் பேங்க் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பவர் பேங்க்கை பயனர் ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 10 முறை அவர்களின் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்துகொள்ள முடியுமென்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. சியோமி நிறுவனத்தின் இந்த புதிய பவர் பேங்க் சாதனத்தின் விலை மற்றும் சிறப்பம்சங்களை விரிவாகப் பார்க்கலாம்.

மி பவர் பேங்க் 3 குயிக் சார்ஜ் எடிஷன் (Mi Power Bank 3 Quick Charge Edition)

மி பவர் பேங்க் 3 குயிக் சார்ஜ் எடிஷன் (Mi Power Bank 3 Quick Charge Edition)

சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய பவர் பேங்க் சாதனத்திற்கு மி பவர் பேங்க் 3 குயிக் சார்ஜ் எடிஷன் (Mi Power Bank 3 Quick Charge Edition) என்று பெயரிட்டுள்ளது. இந்த புதிய பவர் பேங்க் ஒரே நேரத்தில் உங்களுடைய மூன்று சாதனங்களை சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. அதுவும், இதில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் அம்சமும் USB Type-C போர்ட் உடன் இடம்பெற்றுள்ளது.

லோ-கரண்ட் மோடு அம்சம்

லோ-கரண்ட் மோடு அம்சம்

இதில் புதிதாக சியோமி நிறுவனம் லோ-கரண்ட் மோடு என்ற புதிய மோடு அம்சத்தையும் அறிமுகம் செய்துள்ளது. பவர் பேங்க் இன் பவர் பட்டனை இரண்டு முறை கிளிக் செய்து லோ-கரண்ட் மோடு அம்சத்தை ஆக்டிவேட் செய்து உங்கள் ஸ்மார்ட் வாட்ச், ப்ளூடூத் வயர்லெஸ் இயர்பட்ஸ், கேமரா போன்ற குறைந்த மின் அழுத்தம் தேவைப்படும் சாதனைகளை நீங்கள் பாதுகாப்பாக சார்ஜ் செய்துகொள்ளலாம்.

லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள்லோனார் ஏரியை சுற்றியுள்ள அதீத மர்மங்கள்: விசித்திரங்களை போட்டு உடைத்த விஞ்ஞானிகள்

ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 30000 எம்ஏஎச் பவர் பேங்க்

ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 30000 எம்ஏஎச் பவர் பேங்க்

சியோமியின் புதிய 30000 எம்ஏஎச், மி பவர் பேங்க் 3 குயிக் சார்ஜ் எடிஷனில் யூ.எஸ்.பி டைப்-சி 24W மேக்ஸ் ஹை-பவர் இன்புட் ஆதரவும் இருக்கிறது. இது உங்கள் ஸ்மார்ட் சாதனங்களை வேகமான சார்ஜிங் செய்ய பாஸ்ட் சார்ஜிங் அனுபவத்தை வழங்குகிறது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 10 முறைக்கு மேல் சார்ஜ் செய்யும் திறனுடன் இந்த புதிய பவர் பேங்க் சாதனத்தை சியோமி வடிவமைத்துள்ளது.

10.5 முறைக்கு மேல் சார்ஜ் செய்துக்கொள்ளலாம்

10.5 முறைக்கு மேல் சார்ஜ் செய்துக்கொள்ளலாம்

புதிய பவர் பேங்க், சியோமி மி 10 அல்லது சியோமி ரெட்மி கே 30 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களை 4.5 முறை சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. அதேபோல், புதிய ஐபோன் SE (2020) போன்ற போன்களை சுமார் 10.5 முறைக்கு மேல் சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது என்று நிறுவனம் கூறியுள்ளது. முந்தைய தலைமுறை மி பவர் பேங்க் சாதனத்தை விட இதில் பல அம்சங்களை சியோமி நிறுவனம் கணிசமாக அதிகரித்துள்ளது.

நம்பமுடியாத அரிய வகை 'பேபி டிராகன்கள்'.! இரகசிய குகையிலிருந்து இனி மக்களின் பார்வைக்காக.!நம்பமுடியாத அரிய வகை 'பேபி டிராகன்கள்'.! இரகசிய குகையிலிருந்து இனி மக்களின் பார்வைக்காக.!

விலை என்ன?

விலை என்ன?

புதிய 30000 எம்ஏஎச், மி பவர் பேங்க் 3 குயிக் சார்ஜ் எடிசன் முதற்கட்டமாகச் சீனாவில் ஜூன் 18 ஆம் தேதி முதல் சியோமி வலைத்தளத்தில் கிடைக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இதன் உலகளாவிய அறிமுகம் எப்பொழுது என்றும், இந்திய சந்தையில் எப்பொழுது அறிமுகம் செய்யப்படுமென்றும் இன்னும் தகவல் வெளியாகவில்லை. இந்திய மதிப்பின்படி இந்த பவர் பேங்க் தோராயமாக ரூ.1800 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Power Bank 3 unveiled with 30,000 mAh capacity : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X