Home
Gadgets

பைக் டயருக்கு காற்று நிரப்ப 3 நிமிடங்கள்.! கார் டயருக்கு 6 நிமிடங்கள்.! சியோமி சாதனம் அறிமுகம்.!

சியோமி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது, குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன் மற்றும் டிவி மாடல்களுக்கு நல்ல வரவேற்ப்பு உள்ளது. அன்மையில் இந்நிறுவனம் செய்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 இந்நிறுவனம் வீட்டு

அதேசமயம் இந்நிறுவனம் வீட்டு உபகரணங்களையும் அறிமுகம் செய்துவருகிறது, அதற்கும் நல்ல வரவேற்ப்பு உள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிறவனம் ஒருவர் கற்பனை செய்யக்கூடியதை விட அதிகமான பிரிவுகளில் தடம் பதிக்க எண்ணியுள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்திய சந்தைகளில் ஒரு புதிய சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் மிகவும்

அதாவது தற்சமயம் இந்தியாவில் மிகவும் எதிர்பார்த்த சியோமி மி போர்ட்டபிள் எலக்ட்ரிக் ஏர் கம்ப்ரசர் (Mi Portable Electric Air Compressor) சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் விரைவில் விற்பனைக்கு வரும் என சியோமி நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 எலக்ட்ரிக் ஏர் கம்ப்ரசர் என்பது ஒரு மின்சார டயர் பம்பிங் சாதனமாகு

மி போர்ட்டபிள் எலக்ட்ரிக் ஏர் கம்ப்ரசர் என்பது ஒரு மின்சார டயர் பம்பிங் சாதனமாகும்,இது எளிதில் கொண்டு செல்லக்கூடியது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்பிற்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

பைக் டயர்கள் மற்றும்

குறிப்பாக இந்த சாதனம் பைக் டயர்கள் மற்றும் சைக்கிள் டயர்களிலும் காற்று நிரப்புகிறது, இது 150 psi வரை அழுத்தம் கொடுக்கப்படலாம் மற்றும் கால்பந்து மற்றும் கார் டயர்களுக்கும் காற்று நிரப்பும் என்று கூறப்படுகிறது.

 இது முழுமையாக சார்ஜ்

இந்த ஏர் கம்ப்ரசரில் LED ஒளி, psi அளவைக் காண்பிக்கும் டிஸ்பிளே வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் மைக்ரோ யு.எஸ்.பி சார்ஜிங் போர்ட் மற்றும் 2,000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. இது முழுமையாக சார்ஜ் செய்ய மூன்று மணி நேரம் ஆகும். ஒரு பைக் டயரில் காற்றை நிரப்ப 3 நிமிடங்கள், ஒரு கார் டயருக்கு 6 நிமிடங்கள் எடுக்கும் என்று கூறப்படுகிறது.

ங்கள் வாகனங்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்

குறிப்பாக போர்ட்டபிள் எலக்ட்ரிக் ஏர் கம்ப்ரசரில் டயர் அழுத்தத்தைக் கண்டறிய டிஜிட்டல் டிஸ்ப்ளே உள்ளது, அது காற்றின் நிலையை எட்டியிருப்பதைக் கண்டறிந்தால் அது தானாகவே நின்றுவிடும். கண்டிப்பாக இந்த சாதனம் உங்கள் வாகனங்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

 நிறுவனத்தின் மி போர்ட்டபிள் எலக்ட்ரிக் ஏர்

சியோமி நிறுவனத்தின் மி போர்ட்டபிள் எலக்ட்ரிக் ஏர் கம்ப்ரசர் மாடலின் விலை ரூ.2,299-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Portable Electric Air Compressor Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X