இந்தியாவில் மி பாக்கெட் ஸ்பீக்கர் 2 (விலை மற்றும் அம்சங்கள்).!

சியோமி நிறுவனம், இந்திய சந்தையில் அதன் சமீபத்திய ஆடியோ தயாரிப்பு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

|

சியோமி நிறுவனம், இந்திய சந்தையில் அதன் சமீபத்திய ஆடியோ தயாரிப்பு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. மி பாக்கெட் ஸ்பீக்கர் 2 (Mi Pocket Speaker 2) என்கிற பெயரை தாங்கும் கருவியானது குறைந்தபட்ச (கைக்கு அடக்கமான) வடிவமைப்பு, ப்ளூடூத் 4.1 இணைப்பு, 5வாட் ஸ்பீக்கர் மற்றும் தொடர்ச்சியான ம்யூசிக் பேக்கிரவுண்ட் வலனாகும் 7 மணிநேர பேட்டரி ஆயுள் ஆகிய பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.

இந்தியாவில் மி பாக்கெட் ஸ்பீக்கர் 2 (விலை மற்றும் அம்சங்கள்).!

உலக இசை தினத்தையொட்டி ஜூன் 21 அன்று - நாட்டில் - அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மி பாக்கெட் ஸ்பீக்கர் 2 ஆனது அதே தேதியின் 12 மணி முதல் ரூ.1,499/-க்கு மி.காம் வழியாக விற்பனையை தொடங்கியது. இந்த ஸ்பீக்கர் ஆனது மி புளூடூத் ஸ்பீக்கர் பேஸிக் 2 போன்றே கருப்பு மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்கள் வாங்க கிடைக்கிறது.

இதன் ப்ளுடூத் 4.1 திறன்களைக் கொண்டு, மி பாக்கெட் ஸ்பீக்கர் 2 ஆனது 10 மீட்டர் வரை திறம்பட செயல்படுகிறது. மேலும் இதன் 1200mAh பேட்டரியானது 3.7வி திறனை கொண்டுள்ளது. இது -10 டிகிரி செல்சியஸ் மற்றும் 40 டிகிரி செல்சியஸ் ஆகிய வெப்பநிலைக்கு இடையே வேலை செய்யும் திறனையும் கொண்டுள்ளது. யூஎஸ்பி பவர் இன்புட் ஆனது 5வி / 1ஏ (5வாட்) ஆகும்.

அளவீட்டை பொறுத்தவரை, மி பாக்கெட் ஸ்பீக்கர் 2 ஆனது 60x60x93.3 மிமீ உள்ளது. ஸ்பீக்கர் பாடியானது பாலிகார்பனேட் மற்றும் ஏபிஎஸ் பொருளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதன் மேற்பரப்பு அலுமினிய அலையிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் ஒரு எல்இடி ஸ்டேடஸ் இண்டிகேட்டர் உள்ளது.

இதன் உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோன் அழைப்புகள் செய்ய அனுமதிக்கிறது, அழைப்பின் போது இசை தானாகவே இடைநிறுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பிடத்தக்க வகையில், இதன் முன்னோடியான, மி பாக்கெட் ஸ்பீக்கர் இன்னும் இந்திய சந்தையில் அறிவிக்கப்படவில்லை. ஸ்பீக்கர்கள் தவிர, சியோமி நிறுவனம் மி ஹெட்போன்ஸ் கம்போர்ட், மி இன்-இயர் ஹெட்போன்கள் ப்ரோ எச்டி, மி இயர்போன்ஸ் பிளாக், மி இயர்போன்ஸ் சில்வர் மற்றும் மி இயர்போன்ஸ் பேஸிக் உட்பட நாட்டில் பல இயர்போன்ஸ் / ஹெட்போன்களை விற்கிறது.

இந்த வார தொடக்கத்தில், சீன மொபைல் தயாரிப்பாளரான சியோமி, தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தில் அதன் 1000-வது சேவை மையத்தை திறந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை 2014 இல் இந்தியாவில் செயல்பாடுகளை ஆரம்பித்த பின்னர், சியோமி நிறுவனம் இந்திய நாட்டில் 600 க்கும் மேற்பட்ட நகரங்களில் தற்போது அதன் கடைகளை திறந்துள்ளது. இந்த சேவை மையங்களில் 500 க்கும் மேற்பட்டவைகள், மி டிவிக்களை சரிசெய்வதற்க்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளன.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Pocket Speaker 2 With 7-Hour Battery Life Launched in India. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X