Home
Gadgets

இன்று அறிமுகமாகும் சியோமி ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, டேப்லெட்.! முழு விவரம்.!

சியோமி நிறுவனத்தின் Mi Mix 4 ஸ்மார்ட்போன், மி OLED டிவி 2021, மி பேட் 5 சாதனங்கள் இன்று சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மூன்று சாதனங்களும் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் சியோமி நிகழ்வில் அறிமுகம்
செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சாதனங்கள் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படலாம்.

சியோமி மி OLED டிவி 2021

சியோமி மி OLED டிவி 2021

குறிப்பாக மி OLED டிவி 2021 ஆனது அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக எச்டிஆர் ஆதரவு, ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம், வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி உள்ளிட்ட சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும்இந்த புதிய சியோமி டிவி மாடல். அதேபோல் 55-இன்ச், 65-இன்ச், 77-இன்ச் என மூன்று அளவுகளில் இந்த புதிய ஸ்மார்ட் டிவி அறிமுகம்செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மி OLED டிவி 2021 ஸ்மார்

இதுதவிர மி OLED டிவி 2021 ஸ்மார்ட் டிவி மாடல் ஆனது குவாட்-கோர் பிராஸசர் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த கேமிங் அனுபவத்தை தரும் என சியோமிநிறுவனம் கூறியுள்ளது.

 சியோமி Mi Mix 4

சியோமி Mi Mix 4

அதேபோல் சியோமி Mi Mix 4 ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். குறிப்பாக சியோமி Mi Mix 4
ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது.

8ஜிபி/12ஜிபி ரேம்

புதிய சியோமி Mi Mix 4 ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும். அதேபோல் இந்த சியோமி Mi Mix 4 ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் OLED டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய Mi Mix 4 ஸ்மார்ட்போனில் 108எம்பி கேமரா, 4500 எம்ஏஎச் பேட்டரி, 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அமசங்களும் உள்ளன.

சியோமி மி பேட் 5

சியோமி மி பேட் 5

சியோமி மி பேட் 5 எனும் டேப்லெட் மாடல் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும். அதாவது சியோமி மி பேட் 5 சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதி இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் சியோமி மி பேட் 5 மாடலில் 8720 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம்..

மாடலின் பின்புறம் மொத்தம்

சியோமி மி பேட் 5 மாடலின் பின்புறம் மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன. வெளிவந்த தகவலின்படி 12எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என இரண்டு கேமராக்களுடன் இந்த சாதனம் வெளிவரும். இதுதவிர சியோமி மி பேட் 5 மாடலில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Mix 4, Mi Pad 5, Mi OLED TV 2021 launch on today: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X