Home
Gadgets

இந்தியா: பட்ஜெட் விலையில் 55-இனச் மற்றும் 43-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.!

சியோமி மி எல்இடி டிவி 4ஏ ப்ரோ 43-இன்ச் மாடல் பிளாக்ஷிப் குவாட்-கோர் 64-பிட் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது.

இந்தியா சந்தையில் பட்ஜெட் விலையில் சியோமி மி எல்இடி டிவி 4எக்ஸ்(55-இன்ச்) மற்றும் சியோமி மி எல்இடி டிவி 4ஏ ப்ரோ (43-இன்ச்) ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, பின்பு இந்த சாதனங்களுடன் மி சவுண்ட் பார் சாதனத்தையும்
அறிமுகம் செய்துள்ளது சியோமி நிறுவனம்.

பட்ஜெட் விலையில் 55-இனச் மற்றும் 43-இன்ச் சியோமி  டிவிகள் அறிமுகம்.!

மேலும் விரைவில் சியோமி 65-இன்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என அந்நிறுவனம் சார்பாக தகவல் தெரிவிக்க்பபட்டள்ளது, மேலும் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள சாதனங்களின் பல்வேறு சிறப்பம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலைப் பார்ப்போம்.

 சியோமி மி எல்இடி டிவி 4எக்ஸ் ப்ரோ(55-இன்ச்):

சியோமி மி எல்இடி டிவி 4எக்ஸ் ப்ரோ(55-இன்ச்):

சியோமி மி எல்இடி டிவி 4எக்ஸ் ப்ரோ(55-இன்ச்) சாதனம் பொதுவாக 55-இன்ச் 4கே யுஎச்டி எச்டிஆர் 10-பிட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 4840x2160 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்துடன் வெளிவந்துள்ளது. மேலும் 12பட்டன் கொண்ட ரீமோட், ப்ளூடூத், வைஃபை போன்ற பல்வேறு சிறப்பம்சங்களும் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி மி எல்இடி டிவி 4எக்ஸ் ப்ரோ(55-இன்ச்) மென்பொருள்:

சியோமி மி எல்இடி டிவி 4எக்ஸ் ப்ரோ(55-இன்ச்) மென்பொருள்:

சியோமி மி எல்இடி டிவி 4எக்ஸ் ப்ரோ(55-இன்ச்) சாதனத்தில் குவாட்-கோர் ஏஆர்எம் கார்டெக்ஸ்-ஏ53 செயலி மற்றும் 1.3ஜிகாஹெர்ட்ஸ் மாலி-450 ஜிபியு சிப்செட் வசதி இடம்பெறறுள்ளது, மேலும் எப்போதும் போல பேட்ச்வால் ஒஎஸ்
மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ டிவி ஒஸ் வசதியைக் கொண்டுள்ளது இந்த சியோமி மி எல்இடி டிவி 4எக்ஸ் ப்ரோ மாடல். பின்பு க்ரோம்காஸ்ட்,பிளே ஸ்டோர், யூட்யூப் போன்ற பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி மி எல்இடி டிவி 4ஏ ப்ரோ (43-இன்ச்):

சியோமி மி எல்இடி டிவி 4ஏ ப்ரோ (43-இன்ச்):

சியோமி மி எல்இடி டிவி 4ஏ ப்ரோ 43-இன்ச் மாடல் பிளாக்ஷிப் குவாட்-கோர் 64-பிட் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது. பின்பு 3எச்டிஎம் போர்ட், 3யுஎஸ்பி போர்ட்,ஈத்தர்நெட், வைஃபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

சியோமி மி எல்இடி டிவி 4ஏ ப்ரோ (43-இன்ச்) ஸ்பீக்கர்:

சியோமி மி எல்இடி டிவி 4ஏ ப்ரோ (43-இன்ச்) ஸ்பீக்கர்:

சியோமி மி எல்இடி டிவி 4ஏ ப்ரோ (43-இன்ச்) சாதனத்தில் 20வாட் ஸ்பீக்கர் மற்றும் டிடிஎஸ் அம்சங்கள் இடம்பெற்றுள்ளது, பின்பு பேட்ச்வால் ஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு 8.1 டிவி ஒஎஸ் போன்ற அம்சங்களும் இதனுள் அடக்கம். மேலும் பிளே ஸ்டோர், க்ரோம் காஸ்ட், யூட்யூப் போன்ற பல்வேறு செயலிகளைப் பயன்படுத்த முடியும்.

 விலை:

விலை:

சியோமி மி எல்இடி டிவி 4எக்ஸ் ப்ரோ(55-இன்ச்) சாதனத்தின் விலை ரூ.39,999-ஆக உள்ளது.
சியோமி மி எல்இடி டிவி 4ஏ ப்ரோ (43-இன்ச்) சாதனத்தின் விலை ரூ.22,999-ஆக உள்ளது.

மேலும் இந்த சாதனங்கள் வரும் ஜனவரி 15-ம் தேதி முதல் பிளிப்கார்ட் மற்றும் மி.காம் வலைதளத்தில்
விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi LED TV 4X Pro 55-inch, Mi LED TV 4A Pro 43-inch launched starting from Rs. 22,999: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X