55 இன்ச் சியோமி டிவி அதிரடியாக விலை குறைப்பு.!
இந்நிலையில், சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்த 55 இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலையை அதிரடியாக குறைத்து தெறிக்கவிட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
இந்தியாவில் சியோமி நிறுவனம் ஏராளமான மாடல் ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்து வருகின்றது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்றும் இருக்கின்றது.

மேலும், சியோமி நிறுவனம் எம்ஐ ஸ்மார்ட் டிவிகளையும் விற்பனை செய்து வருகின்றது.
இந்நிலையில், சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்த 55 இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலையை அதிரடியாக குறைத்து தெறிக்கவிட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

அரச வைக்கும் சியோமி:
சீனா நிறுவனமாக இருந்தாலும் இந்தியாவில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில் தனது தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றது. இதில் மார்ட்போன்களில் தனி இடம் பிடித்துள்ளது.
இந்நிலையில் சியோமி நிறுவனம் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்தது. பல்வேறு தொழில்நுட்பங்களையும் வழங்கி அதிர விட்டது சியோமி நிறுவனம்.

5 மாதத்திற்கு முன் அறிமுகம்:
சியோமியின் ஸ்மார்ட் டிவி கடந்த 5 மாத்திற்கு முன் எம்ஐ டிவியை அறிமுகம் செய்தது.

விலை குறைப்பு:
இது 55 இன்ச் 4கே ஹெச்டிஆர் இதன் விலை ரூ.49,999. தற்போது இந்த டிவி விலையை ரூ. 2 ஆயிரம் குறைத்துள்ளது.

விலை குறைப்பு காரணம்:
சியோமி ஸ்மார்ட் டிவி மாடல் விலை குறைப்புக்கு காரணம் சாம்சங் நிறுவனம் தனது 4 கே புதிய ரக தொலைக்காட்சியை அறிமுகம் செய்தது ஆகும்.

முன்னதாக விலை குறைப்பு:
கடந்த ஜனவரியில் சியோமி எம்ஐ எல்இடி ஸ்மார்ட் டிவி 4ஏ, 32 இன்ச், எம்ஐ எல்இடி டிவி 4சி ப்ரோ 32 இன்ச், எம்ஐ எல்இடி டிவி 4ஏ ப்ரோ 49 மாடல் விலை சியோமி குறைத்தது.
ஜனவரியில் தொலைக்காட்சிகளுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதால் டிவி விலையை குறைப்பதாக சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆன்லைனிலும் வாங்க முடியும்:
விலை குறைப்பை தொடர்ந்து சியோமி எம்ஐ எல்இடி 4 ப்ரோ 55 இன்ச் மாடல் ரூ.47,999. தற்போது இந்த டிவியை பிளிப்கார்ட், அமேசான், எம்ஐ அதிகாரப்பூர்வ வலைதளம் எம்ஐ ஹோம் எஸ்டோர்களிலும் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications