Home
Gadgets

பிளிப்கார்ட் காலி.. 36 சதவீத ஆஃபரில் 55 இன்ச் டிவி.. டால்பி ஆடியோ.. ஃபயர் டிவி OS.. 32ஜிபி மெமரி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் 55 இன்ச் டிஸ்பிளே கொண்ட சியோமி (XIAOMI) டிவிக்கு 36 சதவீத தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. டால்பி ஆடியோ மட்டுமல்லாமல், ஃபயர் டிவி ஓஎஸ், 32 ஜிபி ஸ்டோரேஜ், 30W ஸ்பீக்கர்கள் போன்ற பல்வேறு பீச்சர்களுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த சியோமி டிவியின் விலை மற்றும் முழு பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சியோமி எம்ஐ எப்எக்ஸ் சீரிஸ் 55 இன்ச் ஃபயர் டிவி (XIAOMI Mi FX Series 55 inch Fire TV) மாடலுக்கு பிளிர்கார்ட் தளத்தில் 36 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடி போக ரூ.34,999 விலைக்கு வாங்க கிடைக்கிறது. ஆனால், இந்த விலையிலும் ரூ.2,500 பேங்க் தள்ளுபடி கூடுதலாக கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.32,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இந்த தள்ளுபடிக்கு குறிப்பிட்ட வங்கியின் கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டும்.

பிளிப்கார்ட் காலி.. 36 சதவீத ஆஃபரில் 55 இன்ச் டிவி.. டால்பி ஆடியோ!

சியோமி எம்ஐ எப்எக்ஸ் சீரிஸ் 55 இன்ச் ஃபயர் டிவி அம்சங்கள் (XIAOMI Mi FX Series 55 inch Fire TV Specifications): இதுவொரு 2025 Edition மாடலாகும். 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளே மற்றும் அல்ட்ரா எச்டி 4K (Ultra HD 4K) ரெசொலூஷன் கொடுக்கிறது. 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 120Hz கேமிங் பூஸ்டர் மற்றும் எச்டிஆர்10 (HDR10) சப்போர்ட் கிடைக்கிறது. டிஎல்ஜி (DLG) டெக்னாலஜி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், டிசிஐ பி3 (DCI P3) கலர் காமட் மற்றும் எம்இஎம்சி (MEMC) கிடைக்கிறது. ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode) கூடுதலாக கிடைக்கிறது. ஆடியோ பீச்சர்களை பார்க்கையில், 30W பாக்ஸ் ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இந்த ஸ்பீக்கர்களில் டால்பி ஆடியோ (Dolby Audio) மற்றும் டிடிஎஸ்-எக்ஸ் (DTS-X) சப்போர்ட் கிடைக்கிறது. அதேபோல டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் (DTS Virtual X) கிடைக்கிறது.

அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் (Alexa Voice Assistant) வருகிறது. ஃபயர் டிவி ஓஎஸ் 8 (FireTv OS 8) கொண்ட ஏ55 குவாட் கோர் (A55 Quad Core) சிப்செட் கிடைக்கிறது. இதுபோக 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கிறது. ஃபயர் டிவி ஓஎஸ் கிடைத்தாலும், ஓடிடி, கேமிங் போன்ற ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கான ஆப் ஸ்டோர் கிடைக்கிறது. மொத்தமாக 12,000 ஆப்களின் சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பிளிப்கார்ட் காலி.. 36 சதவீத ஆஃபரில் 55 இன்ச் டிவி.. டால்பி ஆடியோ!

இதில் பிரைம் வீடியோ (Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாஸ்டார் (JioHotstar) மற்றும் ஆப்பிள் டிவி (Apple TV) போன்ற ஓடிடி ஆப்கள் இன்-பில்ட்டாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சியோமி எம்ஐ எப்எக்ஸ் சீரிஸ் 55 இன்ச் ஃபயர் டிவியில் டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi) மற்றும் ப்ளூடூத் (Bluetooth) கனெக்டிவிட்டி உள்ளது. மேலும், ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring) ஏர் பிளே (Air Play) சப்போர்ட் கிடைக்கிறது.

3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யுஎஸ்பி போர்ட்கள் (USB Ports) மற்றும் 1 ஹெட்போன் ஜாக் (Headphone Jack) கிடைக்கிறது. இந்த டிவியின் மாடல் பெயர் L55MB-FIN ஆகும். பிளாக் கலரில் கிடைக்கிறது. பிரீமியம் மெட்டல் பெசல்-லெஸ் டிசைனில் (Premium Metal Bezel-less Design) வாங்க கிடைக்கிறது. 1 வருடத்துக்கு வாரண்டி பெற்று கொள்ளலாம். இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற டிவியாக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
XIAOMI Mi FX Series 55 inch 4K Smart Fire TV 2025 Edition Available At Discounted Price in Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X