வீட்டுக்கு 1 வாங்கலாம்.. டால்பி ஆடியோ.. 32ஜிபி மெமரி.. ஆஃபரில் Xiaomi 4கே டிவி.. எந்த மாடல்?
சியோமி எம்ஐ எப்எக்ஸ் ப்ரோ 43 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி 2025 (Xiaomi Mi FX Pro 43 inch TV 2025) ஆனது தற்போது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த டிவி 32ஜிபி மெமரி, டால்பி ஆடியோ, எச்டிஅர் 10 பிளஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் சியோமி எம்ஐ எப்எக்ஸ் ப்ரோ 43 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி டிவி மாடலுக்கு 46 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.23,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த டிவியை ரூ.21,999 விலையில் வாங்கிவிட முடியும்.

சியோமி எம்ஐ எப்எக்ஸ் ப்ரோ 43 இன்ச் டிவி அம்சங்கள் (Xiaomi Mi FX Pro 43 inch TV 2025 Specifications): கியூஎல்இடி (QLED) 4கே டிஸ்பிளே வசதியுடன் சியோமி எம்ஐ எப்எக்ஸ் ப்ரோ 43 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், எச்டிஅர் 10 பிளஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), 1.07 பில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
விவிட் பிக்சர் என்ஜின் 2 (Vivid Picture Engine 2) மற்றும் குவாண்டம் டாட் டெக்னாலஜி ஆதரவுகளுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். அதேபோல் இதில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கேமிங் பிரியர்களுக்காக 120Hz கேம் பூஸ்டர் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவும் கிடைக்கிறது.
எம்ஈஎம்சி (MEMC), ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode), பிக்சர்-இன்-பிக்சர் (Picture-in-Picture) மோட், டிசிஐ பி3 கலர் காமட் (DCI P3 Colour Gamut)உள்ளிட்ட அம்சங்களும் இந்த சியோமி எம்ஐ எப்எக்ஸ் ப்ரோ 43 இன்ச் டிவி மாடலில் உள்ளன. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
குவாட் கோர் கோர்டெக்ஸ் ஏ55 (Quad Core Cortex A55) பிராசஸர் கொண்டுள்ளது இந்த அசத்தலான சியோமி எம்ஐ எப்எக்ஸ் ப்ரோ 43 இன்ச் டிவி மாடல். குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். ஃபயர் டிவி ஓஎஸ் 8 (FireTv OS 8) மூலம் இந்த டிவி இயங்குகிறது. பின்பு இதில் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் (Alexa Voice Assistant) வருகிறது.

பயர் டிவி ஓஎஸ் இருந்தாலும், பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார் உள்ளிட்ட அனைத்து ஓடிடி ஆப்களையும் இந்த டிவியில் பயன்படுத்த முடியும். டால்பி ஆடியோ (Dolby Audio) மட்டுமல்லாமல், டிடிஎஸ் எச்டி (DTS HD) மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் (DTS Virtual:X) உள்ளிட்ட ஆடியோ அம்சங்கள் உள்ளன. மேலும் 30W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த டிவி. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
இந்த சியோமி டிவியில் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் கிடைக்கிறது. ஆகவே, இன்-பில்ட் ஸ்டோரேஜ் அதிகமாக வருகிறது. வைஃபை, ஏர்பிளே, மிராகாஸ்ட், புளூடூத், எச்டிஎம்ஐ, யுஎஸ்பி, ஆடியோ ஜேக், ஈதர்நெட், ஏவி உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் உள்ளன. தற்போது பட்ஜெட் விலையில் இந்த டிவி கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








