களமிறங்கிய "சியோமி மி காம்பெக்ட் ப்ளூடூத் ஸ்பீக்கர் 2".! விலை வெறும் _99 மட்டுமே.!
சியோமி நிறுவனத்தின் புதிய "சியோமி மி காம்பெக்ட் ப்ளூடூத் ஸ்பீக்கர் 2" என்ற பிரத்தியேக ப்ளூடூத் ஸ்பீக்கரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
சியோமி நிறுவனத்தின் புதிய "சியோமி மி காம்பெக்ட் ப்ளூடூத் ஸ்பீக்கர் 2" என்ற பிரத்தியேக ப்ளூடூத் ஸ்பீக்கரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ப்ளூடூத் ஸ்பீக்கரின் டிசைன் மற்றும் அதன் அளவு சியோமி பயனர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர், சியோமி இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

சியோமி ப்ளூடூத் ஸ்பீக்கர்
அண்மையில் நடைபெற்ற சியோமி இன் நிகழ்ச்சியில், சியோமி டிவி, ஏர் ப்யூரிஃபையர் எனப் பல புதிய சியோமி தயாரிப்புகளை அந்நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தது. ஆனால் புதிய தயாரிப்பு பட்டியலில் சியோமி மி காம்பெக்ட் ப்ளூடூத் ஸ்பீக்கர் 2 இன் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் சியோமி ப்ளூடூத் ஸ்பீக்கர் இன் விற்பனை தற்பொழுது சியோமி வலைத்தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

ஸ்ட்ராப் ஹோல் ப்ளூடூத் ஸ்பீக்கர்
சியோமி மி காம்பெக்ட் ப்ளூடூத் ஸ்பீக்கர் 2, வயர்லெஸ் மற்றும் வயர்டு ஸ்பீக்கராக பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர் மைக்ரோ யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட் உடன் வருகிறது, ஸ்பீக்கர் இன் அடியில் ஒரு பவர் சுவிட்ச் பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்ட்ராப் கொட்றத்துக்கொள்வதற்காக ஒரு ஸ்ட்ராப் ஹோல்லும் கொடுக்கப்பட்டுள்ளது.

அதிவேக ப்ளூடூத் 4.2 இணக்கம்
சியோமி மி காம்பெக்ட் ப்ளூடூத் ஸ்பீக்கர் 2, இன்பில்ட் மைக் உடன் ஹாண்ட் ஃப்ரீ சேவையைப் பயனர்களுக்கு வழங்குகிறது. உங்கள் மொபைல் இல் வரும் அனைத்து வாய்ஸ் கால்ஸ்களளயும் எளிதாக ப்ளூடூத் ஸ்பீக்கர் இல் கேட்கலாம். இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர் அதிவேக ப்ளூடூத் 4.2 இணக்கத்துடன் விற்பனைக்கு வந்துள்ளது. இத்துடன், 6 மணி நேரம் தடையில்லாமல் தொடந்து நீடித்து உழைக்கும் லித்தியம் பேட்டரி இந்த ஸ்பீக்கர் இல் வழங்கப்பட்டிருக்கிறது.

விலை ரூ._99
இந்த புதிய சியோமி நிறுவனத்தின் சியோமி மி காம்பெக்ட் ப்ளூடூத் ஸ்பீக்கர் 2, சியோமி இன் மி ஆன்லைன் ஸ்டோர் வலைத்தளத்தில் வெறும் ரூ.799 க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications