Home
Gadgets

இந்த சியோமி டிவிக்கு இப்படியொரு சலுகையா? அடேங்கப்பா..!

சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி மாடல்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவருகிறது. இந்நிலையில் சியோமி நிறுவனம் அதன் மி டிவி பிரிவின் கீழ் உள்ள மி டிவி 4 55-இன்ச் மாடலுக்கு இனிமேல் ஆண்ட்ராய்டு
அப்டேட் வழங்கப்படாது என அறிவித்துள்ளது.

விதமாக மி டிவி 4 55-

ஆனால் இதனை ஈடுகட்டும் விதமாக மி டிவி 4 55-இன்ச் டிவி பயனர்களுக்கு Mi Box 4K மீது ரூ.1000 வரை தள்ளுபடியைவழங்குவதாக சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விற்பனை செய்துவருகிறது

கடந்த 2018-ம் ஆண்டு சியோமி நிறுவனம் இந்தியாவில் மி டிவி 55-இன்ச் மாடலை அறிமுகம் செய்தது. அதன்பின்னர் பல்வேறுஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்தது சியோமி. தற்சமயம் இந்நிறுவனம் ஒன்பது மி டிவிகளை ரூ.12,499 முதல் ரூ.54,999 வரை என்கிறவிலை நிர்ணயத்திற்குள் விற்பனை செய்துவருகிறது.

நிறுவனத்தின் மி டிவி 55-இன்ச்

ஆனால் சியோமி நிறுவனத்தின் மி டிவி 55-இன்ச் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு டிவி கோடெக்குகளின் தேவைகளை ஆதரிக்கவில்லை,அதற்கு அதன் தனித்துவமான வடிவமைப்பே காரணம் என சியோமி விளக்கம் கூறியுள்ளது.

ஈதர்செட் போர்ட்,டூயல் பேண்ட்,

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் மி டிவி 55-இன்ச் மாடல் ஆனது யோமியின் பேட்ச்வால் கொண்டு இயங்கியது மற்றும் மாலி டி 830 ஜி.பீ.யுடன் அம்லோஜிக் 64-பிட் குவாட் கோர் ப்ராசஸர் வசதியை கொண்டுள்ளது. மேலும் இந்த டிவியில், மூன்று எச்டிஎம்ஐ போர்ட்டுகள், இரண்டு யுஎஸ்பி போர்ட்கள்,ஈதர்செட் போர்ட்,டூயல் பேண்ட்,வைஃபை உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் அடக்கம்.

 4கே உள்ளடக்கத்தை

பின்பு இந்த மி டிவி 4 55-இன்ச் டிவி மாடல் அதன் பயனர்கள் எச்டிஆர் ஆதரவுடன் 4கே உள்ளடக்கத்தை காண அனுமதிக்கிறது,இதன் விலை ரூ.39,999-ஆகும்.

மி டிவி 4 55-இன்ச் பயனர்களுக்கு மட்டும்...

மி டிவி 4 55-இன்ச் பயனர்களுக்கு மட்டும்...

அதாவது மி பாக்ஸ் 4கே வாங்கும்போது சியோமி நிறுவனம் மி டிவி 4 55-இன்ச் டிவி பயனர்களுக்கு ரூ.1000 தள்ளுபடியைவழங்குகிறது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்நிறுவனம் சாதனத்தின் விலையை ரூ 2499 ஆக குறைக்கிறது என்பது
குறிப்பிடத்தக்கது.

மி பாக்ஸ் 4கே சிறப்பம்சங்கள்

மி பாக்ஸ் 4கே சிறப்பம்சங்கள்

மி பாக்ஸ் 4கே சிறப்பம்சங்கள் என்னவென்றால், ஆண்ட்ராய்டு டிவி 9பை, 2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் ப்ராசஸர் மற்றும்மாலி 450 ஜி.பீ.யூ ஆதரவுகளை கொண்டுள்ளது. மேலும் இதில் 2ஜிபி டி.டி.ஆர் 3 ரேம் மற்றும் 8 ஜிபி ஈ.எம்.எம்.சி மெமரி
ஆதரவுகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக இந்த சாதனத்தில் டால்பி ஆடியோவுக்கான ஆதரவு, 4 கே ரெசல்யூஷன்,எச்டிஆர் 10 வீடியோவை ஆதரவு உள்ளன, எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

பின்பு இதில் யூ.எஸ்.பி 2.0, எச்.டி.எம்.ஐ 2.0 போர்ட், ப்ளூடூத் 4.2, எக்ஸ்டர்னல் ஸ்பீக்கர்களுக்கான டிஜிட்டல் அவுட் போர்உள்ளிட்ட ஆதரவுகளும் இடம்பெற்றுள்ளன.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Box 4K at Rs 1,000 off deal for Mi TV 4 55 and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X