கம்மி விலை: பவர்பேங்க்-ல் சார்ஜ் ஆகும் தரமான சியோமி ட்ரிம்மர் அறிமுகம்.!
சியோமி நிறவனம் தொடர்ந்து புதிய சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சியோமி ட்ரிம்மர் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம்.

அதிகளவில் விற்பனை செய்யப்படும்
சியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் பல்பு என்ற வரிசையில் புதிய அதிநவீன ட்ரிம்மர் சாதனத்தை அறிமுகம் செய்து அதிக வரவேறப்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக இந்த சாதனம் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில ட்ரிம்மர்கள்
பல்வேறு வலைதளங்களில் விற்கப்படும் சில ட்ரிம்மர்கள் அதிக திருப்தியைக் கொடுப்பதில்லை, பின்பு அதிநவீன ட்ரிம்மர்கள் சாதனத்தின் விலையைப் பார்த்தால் மிகவும் உயர்வாக இருக்கும். குறிப்பாக பிலிப்ஸ் நிறுவனத்தின் டிரிம்மர்கள் அதிக விலையுடன் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

10நிமிடம் வரை பயன்படுத்த முடியும்
அதன்படி பல்வேறு நிறுவனங்களுக்கு போட்டியாக ரூ.1199-விலையில் அதிநவீன mi beard trimmer சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது சியோமி நிறுவனம். இதை வெறும் 5நிமிடம் சார்ஜ் செய்தால் 10நிமிடம் வரை பயன்படுத்த முடியும்.

பவர் பேங்க் மூலமாகவும் சார்ஜ் செய்துகொள்ளலாம்
மேலும் முழுசார்ஜ் ஏறினால் 90நிமிடங்கள் வரை இந்த சியோமி ட்ரிம்மரைப் பயன்படுத்தலாம், பின்பு ஹைலைட் ஆன விஷயம் என்வென்றால் இந்த ட்ரிம்மரை பவர் பேங்க் மூலமாகவும் சார்ஜ் செய்துகொள்ளலாம். கண்டிப்பாக இந்த வசதி பல்வேறு மக்களுக்கும் பிடிக்கும்.

ஐபிஎக்ஸ்7 சான்றிதழ்
இந்த சாதனத்தை வாங்க சியோமி தளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம், பின்பு ஸ்டெயின் ஸ்டீல் ப்ளேடுகள் கொண்ட இந்த ட்ரிம்மரில் 40விதமான நீளங்களில் ட்ரிம் செய்ய செட் செய்துகொள்ளலாம். மேலும் கையிலிருந்து நழுவிடாத க்ரிப்பும், ஐபிஎக்ஸ்7 சான்றிதழ் பெற்றிருப்பதால் இதை நீரில் அப்படியே கழுவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசான் மற்றும் மி.காம்
குறிப்பாக கம்மி விலையில் அதிக வசதிகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பை பெறும், மேலும் அமேசான் மற்றும் மி.காம் வலைதளம் மூலம் இந்த சாதனம் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications